வாய் புண்ணிலிருந்து நிவாரணம் வேண்டுமா?.. இதோ வீட்டு வைத்தியங்கள்!

Published On:

| By Santhosh Raj Saravanan

heal mouth ulcers quickly Super home remedies

வாய்ப் புண் வலி, அசவுகரியத்தில் இருந்து நிவாரண பெற சில வீட்டு வைத்தியங்களை நாம் முயற்சிக்கலாம்.

நமக்கு வாயில் ஏற்படும் புண்கள் நம்முடைய அன்றாட செயல்பாடுகளையே கடினப்படுத்தி விடுகின்றன. வாய் புண் காரணமாக பேசுவது, சாப்பிடுவது மற்றும் பல் துலக்குவது கூட வலியை ஏற்படுத்திவிடும். வாய்ப் புண்கள் பெரும்பாலும் நாக்கு, உதடுக்கு உள்புற கீழ் பகுதி அல்லது கன்னங்களின் உட்புறத்தில் தோன்றி வலியை ஏற்படுத்துகின்றன. ஒரு வாய் தண்ணீர் குடிப்பதற்குக் கூட முடியாத சூழலை நமக்கு வாய் புண்கள் உண்டாக்கி விடுகின்றன.

ADVERTISEMENT
வாய் புண்கள் ஏற்பட காரணம்

வைட்டமின் குறைபாடுகள், மன அழுத்தம், காரமான உணவுகள் அல்லது செரிமானப் பிரச்சனைகள் போன்ற காரணங்களால் வாய் புண்கள் (mouth ulcers reasons) ஏற்படுகின்றன. பெரும்பாலான வாய் புண்கள் தானாகவே குணமாகிவிட்டாலும், அதனால் ஏற்படும் வலியையும் எரிச்சலையும் சமாளிப்பது கடினமாக இருக்கலாம். இந்த சூழலில் வாய் புண்கள் குணமாக நீண்ட நாட்கள் எடுத்துக்கொண்டால் வீட்டு வைத்தியங்களைக் கொண்டு விரைவான நிவாரணத்தை அளிக்க முடியும்.

வாய் புண்கள் விரைவாகக் குணமடைய தேன்

தேனில் இயற்கையான பாக்டீரியா எதிர்ப்புப் பண்புகள் உள்ளன. இது வாய் புண்களை (Honey fast healing mouth ulcer) குணப்படுத்தும் செயல்முறையை விரைவுபடுத்த உதவுகிறது. ஒரு நாளைக்கு இரண்டு முதல் மூன்று முறை புண்ணின் மீது சிறிதளவு தேனைத் தடவுவது, வலியையும் வீக்கத்தையும் குறைக்கிறது. அத்துடன், புண் உள்ள பகுதியை ஈரப்பதமாகவும் வைத்திருக்க உதவும்.

ADVERTISEMENT
எரிச்சலைத் தணிக்க தேங்காய் எண்ணெய்

தேங்காய் எண்ணெயில் உள்ள அழற்சி எதிர்ப்புப் பண்புகள், வாய்ப் புண் வீக்கத்தையும் எரிச்சலையும் தணிக்க உதவுகிறது. தேங்காய் எண்ணெய்யை (Coconut oil benefits) பஞ்ச்சில் நனைத்து புண்ணின் மீது மென்மையாகத் தடவுவது, குளிர்ச்சியான உணர்வைத் தந்து, அசௌகரியத்தைப் போக்கும்.

தயிர் மற்றும் மஞ்சள் தண்ணீர்

குளிர்ச்சியான தயிரைச் சாப்பிடுவது வாய் புண்ணால் ஏற்படும் எரிச்சல் உணர்வைத் தணிக்க உதவுகிறது. தயிரில் உள்ள புரோபயாடிக்குகள் (curd probiotics), வாயில் ஆரோக்கியமான பாக்டீரியா சமநிலையைப் பராமரிக்க உதவுகின்றன. இது புண் விரைவாகக் குணமடையவும், எரிச்சலைக் குறைக்கவும் துணைபுரிகிறது. இதேபோல மஞ்சள் அதன் கிருமி நாசினி குணங்களுக்காக நன்கு அறியப்படுகிறது. மஞ்சள் கலந்த வெதுவெதுப்பான நீரில் (Turmeric water) வாய் கொப்பளிப்பது, நோய்த்தொற்றைக் குறைக்கவும், புண்கள் விரைவாகக் குணமடையவும் உதவும்.

ADVERTISEMENT
வெண்ணெய், மணத்தக்காளி

வாய்ப் புண் உள்ள இடத்தில் சிறிது வெண்ணெய்யை (Butter heal mouth ulcer) தடவி வந்தால் புண் குணமாக வாய்ப்புகள் உள்ளன. அதேபோல மணத்தக்காளி கீரையை குழம்பாகவோ அல்லது பொறியல் செய்தோ சாப்பிட்டால் புண் குணமடையும்.

வலியை மரத்துப்போகச் செய்ய பனிக்கட்டி

வாய்ப் புண் எரிச்சல் கடுமையாக இருந்தால், புண்ணின் மீது ஒரு சிறிய பனிக்கட்டியை மெதுவாக வைத்து தேய்க்கலாம். இது வலி இருக்கும் பகுதியை மரத்துப்போகச் செய்து (Ice reduce pain) அசௌகரியத்தைக் குறைப்பதன் மூலம் உடனடி நிவாரணம் அளிக்கிறது. இந்த சிகிச்சைகள் பலனளிக்கக்கூடியவை என்றாலும், அடிக்கடி அல்லது நீண்ட காலம் நீடிக்கும் புண்களைப் புறக்கணிக்கக் கூடாது. இந்தப் பிரச்சனை தொடர்ந்தால் அல்லது மீண்டும் மீண்டும் வந்தால் மருத்துவரை சந்தித்து ஆலோசனை பெற வேண்டும்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share