ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதா மக்களவையில் இன்று (டிசம்பர் 17) தாக்கல் செய்யப்படவுள்ள நிலையில், அதற்கு எதிராக திமுக சார்பில் கனிமொழி எம்.பி, டி.ஆர். பாலு நோட்டீஸ் கொடுத்துள்ளனர்.
இந்தியா முழுவதும் ஒரே நேரத்தில் மக்களவை, மாநில சட்டப்பேரவைகள் மற்றும் மாநகராட்சிகளுக்கு தேர்தல் நடத்துவது தொடர்பாக நீண்ட காலமாக விவாதிக்கப்பட்டு வந்தது.
மத்திய பாஜக அரசு ஆட்சிக்கும் வந்ததும் இதற்கான பணிகளை முன்னெடுத்தது. அதன்படி முன்னாள் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தலைமையில் அமைக்கப்பட்ட உயர்நிலைக் குழு கடந்த மார்ச் மாதம் தனது அறிக்கையை குடியரசுத் தலைவர் திரவுபதி முர்முவிடம் தாக்கல் செய்தது.
இந்த அறிக்கையை ஏற்று, தயாரிக்கப்பட்ட ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டம் தொடர்பான சட்ட மசோதாவிற்கு பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை சமீபத்தில் ஒப்புதல் அளித்தது.
இந்த நிலையில், ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதா இன்று நண்பகல் 12 மணியளவில் மக்களவையில் மத்திய சட்டத்துறை அமைச்சர் அர்ஜுன் ராம் மேக்வால் தாக்கல் செய்ய உள்ளார்.
இந்த மசோதாவிற்கு காங்கிரஸ், திமுக, திரிணாமூல் காங்கிரஸ், சமாஜ்வாதி உள்ளிட்ட இந்திய கூட்டணிகள் கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.
ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதாவிற்கு எதிராக திமுக நாடாளுமன்ற குழு தலைவர் கனிமொழி மற்றும் டி.ஆர்.பாலு ஆகியோர் இன்று நோட்டீஸ் கொடுத்துள்ளனர்.
அதில் ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதா அறிமுகம் செய்யப்படும் போதே எதிர்ப்பு தெரிவிக்க திமுக தரப்பில் கோரப்பட்டுள்ளது.
கிறிஸ்டோபர் ஜெமா
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
தமிழக மீனவர் பிரச்சனை : இலங்கை அதிபர் ஏகேடி – பிரதமர் மோடி சந்திப்பில் எடுத்த முடிவு என்ன?
விஜய்சேதுபதி மீது போலீஸில் புகார்!
டாப் 10 நியூஸ் : ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதா தாக்கல் முதல் 4 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட் வரை!