இனி நிரந்தர அரசு பணிகள் இல்லையா?

Published On:

| By Kavi

இனி நிரந்தர அரசு பணிகள் இல்லையா என திமுக எம்.பி.கனிமொழி கேள்வி எழுப்பியுள்ளார்.

அரசு மற்றும் பொதுத்துறை நிறுவனங்களுக்கு தமிழ்நாடு அரசின் ஓஎம்சிஎல் நிறுவனம் மூலம் மட்டுமே இனி ஒப்பந்த பணியாளர்களை நியமிக்க வேண்டும் என்று தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

ADVERTISEMENT

இதுகுறித்து அறிக்கை வெளியிட்டுள்ள திமுக எம்.பி.கனிமொழி,

”தமிழ்நாட்டில் தற்காலிகப் பணியில் இருப்பவர்களின் பணிகளை நிரந்தரமாக்குவோம் என மோசடியாகத் தேர்தல் வாக்குறுதியளித்து ஏமாற்றிய தவெக அரசு, போராடும் ஒப்பந்த ஊழியர்களையும் ஒடுக்கி வருகிறது.

ADVERTISEMENT

இந்நிலையில், வெளிநாட்டு வேலைவாய்ப்பு நிறுவனம் (OMCL) வழியாக அரசு மற்றும் பொதுத்துறை நிறுவனங்களுக்கு ஒப்பந்த முறையில் ஆட்களை நியமிக்க அறிவிப்பை வெளியிட்டிருப்பதன் மூலம், இனி நிரந்தர அரசுப் பணிகள் இல்லை, எல்லாம் ஒப்பந்தப் பணிகள்தான் எனச் சொல்ல வருகிறதா தவெக அரசு?

இந்த அரசு ஏற்கனவே அரசுப் போட்டித் தேர்வுகளில் குறைந்த பணியிடங்களையே ஒதுக்கிவரும் சூழலில், ஒப்பந்த அடிப்படையில் பணியாளர்களை நியமிக்க முயற்சிப்பது லட்சக்கணக்கான இளைஞர்களின் அரசு வேலைக் கனவைச் சிதைக்கும் நடவடிக்கையாகும்” என்று கண்டனம் தெரிவித்துள்ளார்.

ADVERTISEMENT
Photo of author
Kavi

சமூகம், அரசியல், நீதி நிர்வாகம் சார்ந்த பிரச்சினைகள் குறித்து 2016ஆம் ஆண்டிலிருந்து எழுதி வருகிறார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share