வைஃபை ஆன் செய்ததும், “முத்துக்கு முத்தாக சொத்துக்கு சொத்தாக
அண்ணன் தம்பி பிறந்து வந்தோம்”ன்னு ஹம்மிங் செய்தபடியே டைப் செய்ய தொடங்கியது வாட்ஸ் ஆப்.
என்னங்க ப்ரோ.. இப்ப அண்ணன் தம்பியை பத்தி சொல்ல போறீங்களா? இல்லை ‘முத்து’ பத்தியை சொல்ல போறீங்களா?
ஆஹா.. ப்ரோ… பொறுங்க.. திமுக மாஜி அமைச்சர் அன்பில் மகேஷ் அரெஸ்ட்ல கடைசி நிமிடம் வரைக்கும் என்ன நடந்துச்சு நேத்து டீட்டெய்லா சொல்லி இருந்தோம் இல்லையா? அதுல இப்ப லேட்டஸ்ட் அப்டேட்டை சொல்றேன் ப்ரோ.
இந்த வழக்குல முக்கியமா தேடப்பட்டு வருகிறவர் முத்துக்குமார்.. இவர் அன்பில் மகேஷின் கல்லூரி நண்பர், எக்ஸ் எம்.எல்.ஏ., திமுக ஆட்சியில பெற்றோர் ஆசிரியர் சங்க தலைவரா இருந்தவர்.
முத்துக்குமார் தரப்புல ஜாமீன் கேட்டு நீதிமன்றத்துக்கு போனப்ப அந்த மனு டிஸ்மிஸ் ஆகிடுச்சு.. அப்பவே அரசு தரப்புல, ‘முத்துக்குமார் எங்கே இருக்காருன்னே தெரியல. அவரை அன்பில் மகேஷ் தரப்புதான் ரகசியமா தங்க வச்சிருக்காங்க’ன்னு சொல்லி இருந்துச்சு..
இந்த நிலையில முத்துக்குமாரை எப்படியாவது கண்டுபிடிக்கணும்னு போலீசார் தீவிரமா முயற்சி செஞ்சது.. இதுக்காக முத்துக்குமார் குடும்பத்துல சில பேரைத் தொடர்புகொண்டு, ‘நீங்க அன்பில் மகேஷ்கிட்ட போய்க் கேளுங்க. முத்துக்குமார் எங்கே இருக்காருன்னு விசாரிங்க’ன்னு சொல்லி அனுப்பியது.
அதனால முத்துக்குமார் குடும்பத்தினரும் அன்பில் மகேஷ்கிட்ட கேட்டபோது, ‘நீங்க தைரியமா இருங்க. எல்லாம் பார்த்துக்கலாம். அவரு பாதுகாப்பாத்தான் இருக்காரு’ன்னு சொல்லி அனுப்பினாராம்.
இந்தத் தகவலை வைத்துத்தான் முத்துக்குமார் தலைமறைவாக இருக்க அன்பில் மகேஷ்தான் காரணம்.. அவருதான் பாதுகாப்பாக வெச்சிருக்கிறாருன்னு கோர்ட்டிலேயே அரசு தரப்பு சொன்னது..
இப்ப அன்பில் மகேஷை போலீஸ் கைது செஞ்சு ஜெயில்ல அடைச்சுருச்சு.. சென்னை புழல் சிறையில் இருக்கிற அன்பில் மகேஷ் ஜாமீன் கேட்டு மனு தாக்கல் செஞ்சிருக்கிறார்.. இந்த மனு மீது நாளைக்கு விசாரணை நடக்குது..
இதை பத்தி அன்பில் மகேஷ் தரப்புல விசாரிச்சப்ப, “முத்துக்குமார் தலைமறைவாக இருக்கிற வரைக்கும் மகேஷுக்கு ஜாமீன் கிடைக்கிறதுல சிக்கல் இருக்குது.. அதனால முத்துக்குமாரை சரணடைய வைக்கணும்னு ரொம்பவே முயற்சி செய்யறோம். ஆனா முத்துக்குமாரை யாராலுமே தொடர்புகொள்ள முடியலை..
முத்துக்குமார் வழக்கமா தன்னோட அம்மாவுக்குப் போன் பண்ணிப் பேசுவார். இப்ப அம்மாவுக்குக்கூட முத்துக்குமார்கிட்ட இருந்து போன் வர்றதில்லை. குடும்பத்தினர் யார்கிட்டயும் தொடர்புல இல்லை. எங்க சைடுல இருக்கிற தொடர்பையும் முழுசா துண்டிச்சுக்கிட்டு அப்ஸ்கேண்டாகிட்டார் முத்துக்குமார்.. மகேஷ் ஜாமீன் மனு மீது நாளைக்கு விசாரணை நடக்கிறதால தொடர்ந்து டிரை பண்றோம் சார்”ன்னு சொல்றாங்க..
இதுக்கு இடையில இந்த வழக்குல முதலில் கைது செய்யப்பட்டு இப்ப ஜாமீனில் வந்திருக்கிற பி.டி.அரசகுமார், அன்பில் மகேஷை சில நாட்களுக்கு முன்னாடி சந்திச்சு பேசுனாராம்.. அப்ப, “எல்லாரும் சொல்ற மாதிரி நான் எந்த வாக்குமூலமும் போலீஸ்கிட்ட கொடுக்கல. என்னைக் கேட்டாங்க. அப்படியெல்லாம் ஒண்ணும் இல்லன்னுதான் சொல்லியிருக்கேன்” ன்னு சொன்னாராம் அரசகுமார். அவரு இப்படி சொன்னதால அன்பில் மகேஷ் தரப்பு கொஞ்சம் நம்பிக்கையோட இருந்துச்சு..
ஆனாலும் நேத்து போலீஸ் அன்பில் மகேஷை கைது செஞ்சது.. இதை பத்தி நாம போலீஸ் தரப்புல விசாரிச்சப்ப, “பி.டி. அரசகுமார் பல தகவல்களை சொல்லி இருக்கிறார்.. அவரோட வாக்குமூலத்தை மட்டுமே நாங்க வைச்சுக்க முடியுமா?
பி.டி. அரசகுமாரும் முத்துக்குமாரும் பல ஊர்களுக்குப் போய் தனியார் பள்ளி நிர்வாகிகள், கல்வி நிறுவனங்களோட உரிமையாளர்களை அழைச்சுக் கூட்டங்கள் நடத்தியிருக்காங்க.. அந்தக் கூட்டங்களுக்குப் போறவங்க செல்போனை வெளியிலேயே வச்சிட்டு வரணும்னு கண்டிஷன் போட்டிருக்காங்க… உள்ளே என்ன பேசுறாங்கங்கிற விவரம் வெளியே போகக்கூடாதுங்கிறதுக்காக இப்படிச் செஞ்சாங்க…
தஞ்சாவூரில நடந்த கூட்டத்திலும் இப்படித்தான் ஏற்பாடு செஞ்சிருந்தாங்க.. ஆனாலும் அந்த கூட்டத்துல பேசுனதை யாரோ ரகசியமா பதிவு செஞ்சிருக்காங்க. அந்த ஆடியோ இப்ப எங்க டிபார்ட்மெண்ட் கையில இருக்குது.
அந்த ஆடியோவில, தனியார் பள்ளிகளுக்கு அங்கீகாரம் வாங்கித் தர்றது, அங்கீகாரத்தைப் புதுப்பிக்கிறது, தடையில்லாச் சான்றிதழ் வாங்கித் தர்றது, பள்ளிகளைத் தரம் உயர்த்துறது, கட்டிடங்களுக்கான திட்ட அனுமதிகளைப் பெற்றுத் தர்றதுன்னு பல விஷயங்களைப் பத்திப் பேசியிருக்காங்க.. இப்படி ‘ஒவ்வொரு அனுமதிக்கும் தனித்தனியா அலைய வேண்டாம். எல்லாத்தையும் சேர்த்து ஒரு பேக்கேஜாக நாங்க வாங்கித் தர்றோம்’ அப்படின்னு பேசியிருக்கிறாங்க..
அதே மாதிரி கும்பகோணம் கிறிஸ்தவப் பள்ளி நிர்வாகமும் ரூ.3 கோடி கொடுத்துருக்கு. ஆனா அவங்களுக்கு வேலை செஞ்சு கொடுக்காததால அவங்களும் நெருக்கிட்டு இருக்காங்க.. இப்ப அந்த கும்பகோணம் பள்ளி நிர்வாகத்தையும் விசாரிச்சு தகவல்களை வாங்கி இருக்கிறோம்..
இதை எல்லாம் வெச்சுதான் அன்பில் மகேஷை ’ஸ்டிராங்கா’ கைது செஞ்சுட்டாங்க எங்க டிபார்ட்மெண்ட்”ன்னு சொல்றாங்க ப்ரோ.
அதாவது, செந்தில் பாலாஜி கேஸில அவரது தம்பி அசோக்குமார் தலைமறைவாக இருக்கிறதை காரணமா வெச்சு எப்படி அவருக்கு ஜாமீன் கிடைக்கிறதுல சிக்கல் இருந்துச்சோ அதே மாதிரி முத்துக்குமார் தலைமறைவாக இருக்கிறதை வெச்சு அன்பில் மகேஷுக்கு ஜாமீன் கிடைக்காம போயிடுமோன்னு அவரது குடும்பத்தினர் ரொம்பவே பதற்றத்துல இருக்காங்க.. அதனால முத்துக்குமாரை எப்படியாவது வெளியே கொண்டுவர ரொம்பவே போராடிகிட்டு இருக்குது அன்பில் மகேஷ் தரப்பு ப்ரோன்னு டைப் செய்தபடியே சென்ட் பட்டனை தட்டிவிட்டு ஆஃப் லைன்னுக்குள் போனது வாட்ஸ் ஆப்.
