அன்பில் மகேஷ் வழக்கு: தொழிலதிபர் சண்முக பிரியா வீட்டில் மத்திய குற்றப்பிரிவு போலீசார் சோதனை

Published On:

| By Pandeeswari Gurusamy

முன்னாள் பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி வழக்கில் தொழிலதிபர் சண்முக பிரியா வீட்டில் மத்திய குற்றப்பிரிவு போலீசார் சோதனை நடத்தி வருகின்றனர்.

கடந்த திமுக ஆட்சிக் காலத்தில் தனியார் பள்ளிகளுக்கு அங்கீகாரம் பெற்றுத் தருவதற்காக, ரூ.100 கோடிக்கும் மேல் லஞ்சமாக வசூலிக்கப்பட்டதாகக் குற்றச்சாட்டு எழுந்தது. இது தொடர்பாக, முன்னாள் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் மீது சென்னை மத்திய குற்றப்பிரிவு காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

ADVERTISEMENT

இந்த வழக்கில் அன்பில் மகேஷ் கைது செய்யப்பட்டு, தற்போது சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்நிலையில், ஜாமீன் கோரி சென்னை ஊழல் தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் அவர் மனுத் தாக்கல் செய்துள்ளார். அந்த மனு மீதான விசாரணை நாளை நடைபெற உள்ள நிலையில், அன்பில் மகேஷை 5 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்கக் காவல்துறையினர் திட்டமிட்டுள்ளனர்.

இதற்கிடையில், இந்த லஞ்சப் புகார் தொடர்பாக சென்னை பெருங்குடி, அம்பேத்கர் நகர், பெருந்தலைவர் காமராஜர் நகரில் உள்ள ராம்ஸ் ராகஸ்ரீ வில்லாஸ் என்ற தனியார் அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வரும் ஷண்முக பிரியா என்பவர் வீட்டில் மத்திய குற்றப்பிரிவு போலீசார் அதிரடி சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

ADVERTISEMENT

10 பேர் கொண்ட அதிகாரிகள் குழு ஒன்று காலை 11.45 மணி முதல் அதிரடி சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷ் தொடர்பான வழக்கில் ஷண்முக பிரியா வீட்டில் மத்திய குற்றபிரிவு ஒரு ஆய்வாளர் தலைமையில் போலீசார் சோதனையில் ஈடுபட்டு வருவது தெரியவந்தது.

ADVERTISEMENT
Photo of author
Pandeeswari Gurusamy

ஊடகத்துறையில் கடந்த 2010-ஆம் ஆண்டு முதல் பணியாற்றி வரும் பாண்டீஸ்வரி குருசாமி, 'தீக்கதிர்' நாளிதழ் & இணையதளம் மற்றும் 'இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ்' ஆகிய நிறுவனங்களில் பணியாற்றியவர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share