த.வெ.க. ஆட்சி இருக்கும் வரை தமிழ்நாட்டுக்கு விடிவே இல்லை என மு.க.ஸ்டாலின் விமர்சித்துள்ளார்.
தமிழகத்தில் விஜய் தலைமையிலான தவெக ஆட்சி அமைந்ததில் இருந்தே, சட்டம்-ஒழுங்குப் பிரச்சினைகள் தொடர்ச்சியாக அதிகரித்து வருவதாக குற்றச்சாட்டுகள் எழுந்து வருகின்றன. இது குறித்து திமுக, அதிமுக, பாஜக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடும் கண்டனங்களைத் தெரிவித்து வருகின்றன.
இந்நிலையில், சென்னை மயிலாப்பூரைச் சேர்ந்த மைத்ரேயன் (30) என்பவர், காவல்துறையின் ‘சி’ பிரிவு சரித்திரப் பதிவேடு குற்றவாளி பட்டியலில் இடம்பெற்றவர். இவர் நேற்று (அக். 27) காலை 11.30 மணியளவில், சென்னை அடையாறு இந்திரா நகர் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி அருகே உள்ள சாலையில் சென்றுகொண்டிருந்தார். அப்போது, அவரை ஒரு கும்பல் வழிமறித்தது. அவர்களிடமிருந்து தப்பி ஓட முயன்ற மைத்ரேயனை, அந்த கும்பல் விரட்டிச் சென்று அரிவாளால் கொடூரமாக வெட்டிக் கொலை செய்தது.
அது தொடர்பான வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலைகள் ஏற்பட்டுள்ளன. இந்தச் சம்பவத்தில் தொடர்புடைய இருவர் தற்போது காவல் நிலையத்தில் சரணடைந்துள்ளனர்.
இச்சம்பவம் குறித்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தனது ‘எக்ஸ்’ பக்கத்தில் “சிறை, பள்ளி, சாலை, நீதிமன்றம் என எங்கும் பாதுகாப்பில்லை!
இதைப் பற்றி எல்லாம் முதலமைச்சருக்கு அக்கறையில்லை. அதிகாரிகளுக்குச் சரியான வழிகாட்டுதல் இல்லை; குற்றவாளிகளுக்குப் பயமில்லை.
த.வெ.க. ஆட்சி இருக்கும் வரை தமிழ்நாட்டுக்கு விடிவே இல்லை!”
என பதிவிட்டுள்ளார்.
