தமிழகத்தில் விஜய் தலைமையிலான காங்கிரஸ்–தவெக கூட்டணி ஆட்சியில் சட்டம் ஒழுங்கு முற்றிலும் சீர்குலைந்துவிட்டதாக அகில இந்திய பாஜக தலைமை கடுமையாக விமர்சித்துள்ளது.
தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு பிரச்சினைகளை முன்வைத்து விஜய் அரசை தமிழக பாஜக தொடர்ந்து விமர்சித்து வருகிறது. இந்த நிலையில், அகில இந்திய பாஜகவின் அதிகாரப்பூர்வ எக்ஸ் பக்கத்திலும் விஜய் அரசுக்கு எதிரான விமர்சனம் பதிவிடப்பட்டுள்ளது.
அந்தப் பதிவில், “தமிழகத்தில் காங்கிரஸ்–தவெக ஆட்சியின் கீழ் சட்டம் ஒழுங்கு முற்றிலும் தோல்வியடைந்துவிட்டது” என்று பாஜக குற்றம்சாட்டியுள்ளது.
மேலும், “தேனி சிறையில் இருந்து 17 கைதிகள் தப்பி உள்ளனர். தமிழகம் முழுவதும் பல குழந்தைகள் காணாமல் போயுள்ளனர். தமிழக மக்கள் வாக்களித்துத் தேர்ந்தெடுத்த ஆட்சி இப்படித்தான் இருக்க வேண்டுமா?” என்றும் பாஜக கேள்வி எழுப்பியுள்ளது. அத்துடன் இது தொடர்பான வீடியோவும் பாஜகவின் அதிகாரப்பூர்வ எக்ஸ் பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
