திமுக, பாஜகவுடன் நேரடியாகவோ மறைமுகமாகவோ கூட்டணி இல்லை- நடிகர் விஜய் திட்டவட்ட அறிவிப்பு!

Published On:

| By Mathi

TVK Vijay On BJP Alliance

திமுக மற்றும் பாஜகவுடன் தமிழக வெற்றிக் கழகம் நேரடியாகவோ மறைமுகமாகவோ கூட்டணி வைத்துக் கொள்ளாது என்று அக்கட்சியின் தலைவர் நடிகர் விஜய் திட்டவட்டமாக அறிவித்துள்ளார். TVK VIjay BJP Alliance

சென்னையை அடுத்த பனையூரில் இன்று ஜூலை 4-ந் தேதி வெள்ளிக்கிழமையன்று நடைபெற்ற தவெக செயற்குழு கூட்டத்தில் அக்கட்சித் தலைவர் நடிகர் விஜய், செயற்குழு தீர்மானத்தை வாசித்து பேசியதாவது: கொள்கை எதிரிகள் மற்றும் பிளவுவாத சக்திகளுடன் என்றைக்கும் நேரடியாகவோ மறைமுகமாகவோ கூட்டணி இல்லை.

ADVERTISEMENT

ஒன்றிய அளவில் மலிவான அரசியல் ஆதாயங்களுக்காக மக்களை மதரீதியாக பிளவுபடுத்தி, மக்களிடையே வேற்றுமையை விதைத்து அதில் குளிர்காய நினைக்கிறது பாஜக. அவர்களின் இந்த விஷமத்தனமான வேலைகள், வேறு எங்கு வேண்டுமானாலும் எடுபடலாம்; ஆனால் தமிழ்நாட்டில் ஒருபோதும் எடுபடாது.

சமூக நீதியும் நல்லிணக்கமும் சகோதரத்துவமும் சமத்துவமும் ஆழமாய் வேரூன்றிய மண் இந்த தமிழ்நாட்டு மண். எனவே, இங்கு தந்தை பெரியாரை அவமதித்தோ, அறிஞர் அண்ணாவை அவதூறுக்கு உள்ளாக்கியோ அல்லது தமிழ்நாட்டின் மதிப்புக்குரிய தலைவர்களை வைத்தோ அரசியல் செய்ய நினைத்தால் அதில் பாஜக ஒருபோதும் வெற்றி பெறவே இயலாது.

ADVERTISEMENT

சுயநல அரசியல் லாபங்களுக்காக பாஜகவுடன் கூடி குழாவ, கூட்டணிக்குப் போக, திமுகவோ அதிமுகவோ இல்லை நம் தமிழக வெற்றிக் கழகம்.

கொள்கை எதிரிகள் மற்றும் பிளவுவாத சக்திகளுடன் என்றைக்கும் நேரடியாகவோ மறைமுகமாகவோ கூட்டணி இல்லை என்பதில் தமிழக வெற்றிக் கழகம் மிக உறுதியாக இருக்கிறது.

ADVERTISEMENT

கூட்டணி என்றாலும் தமிழக வெற்றிக் கழகம் தலைமையில் அமையும் கூட்டணி எப்போதும் திமுக மற்றும் பாஜகவுக்கு எதிரானதாகத்தான் இருக்கும் என்பதையும் அதில் சமரசம் என்ற பேச்சுக்கே இடமில்லை என்பதையும் உறுதிபட இச்செயற்குழு வாயிலாக தெரிவித்துக் கொள்கிறோம். இது இறுதியான தீர்மானம் மட்டுமல்ல; உறுதியான தீர்மானம். இவ்வாறு விஜய் பேசினார்.

Photo of author
Mathi

30 ஆண்டுகள் ஊடகத் துறை அனுபவம், அச்சு, இணையம், வானொலி, தொலைக்காட்சி ஊடகங்களில் பணியாற்றியவர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share