சென்னையில் அடுத்த மாரத்தான் எப்போது?

Published On:

| By admin

சென்னையில் அடுத்த மாரத்தான் போட்டி 2023 ஜனவரி 8 ஆம் தேதி நடக்கவுள்ளது. இதற்கு ஃப்ரஷ்வோர்கஸ் இன்க் ( freshworks INC ) என்ற உலகளாவிய மென்பொருள் நிறுவனம் ஸ்பான்சர் செய்யவுள்ளது.

சென்னை ஓட்டப்பந்தய வீரர்களால் நடத்தப்படும் இந்த மாரத்தான் நீரிழிவு நோய் குறித்த விழிப்புணர்வை அதிகரிப்பதற்கான முயற்சியாகும். இன்சுலின் தேவைப்படும் குழந்தைகளுக்காக நிதி திரட்டுவதை நோக்கமாகக் கொண்டு மாரத்தான் போட்டி நடத்தப்படுகிறது.

ADVERTISEMENT

பல ஆண்டுகளாக ‘சென்னை மாரத்தான்’ தமிழகத்தின் மிகப்பெரிய ஓட்டப் போட்டியாகவும், இந்தியாவிலேயே இரண்டாவது பெரிய ஓட்டப் போட்டியாகவும் உள்ளது. முதலாவது பெரிய ஓட்டப் போட்டியாக  மும்பை மாரத்தான் உள்ளது.

இந்த மாரத்தான் ஆண்கள் மற்றும் பெண்களுக்கான நான்கு நிகழ்வுகளைக் கொண்டுள்ளது.

ADVERTISEMENT

முழு மாரத்தான் ( 42.195 கிமீ ) இது நிகழ்வின் முதன்மை பந்தயமாகும். இரண்டாவதாக பெர்ஃபெக்ட் 20 மைலர் ( 32.186 கிமீ ) இது 2019 இல் முதல் முறையாக அறிமுகப்படுத்தப்பட்டது. மூன்றாவதாக அரை மாரத்தான் ( 21.097 கிமீ ) மற்றும் இறுதியாக 10 கிமீ மாரத்தான் ஒட்டத்துடன் முடிவடைகிறது.

சென்னை மாரத்தான் தற்போது சர்வதேச விளையாட்டு வீரர்களின் கவனத்தை தொடர்ந்து ஈர்க்கிறது. இதனால் சென்னையின் அடுத்த மாரத்தானில் சர்வதேச விளையாட்டு வீரர்கள் பங்கேற்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ADVERTISEMENT

மோனிஷா

Photo of author
admin
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share