தவெக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் திடீரென ஒத்திவைப்பு!

Published On:

| By Mathi

TVK VIjay

தமிழக வெற்றிக் கழகத்தின் இன்றைய (ஜூலை 20-ந் தேதி) மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் திடீரென ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இன்றைய கூட்டத்தில் தவெக உறுப்பினர் சேர்க்கைக்கு புதிய செயலியை அறிமுகப்படுத்தவும் திட்டமிடப்பட்டிருந்தது.

தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் பணிகளை அனைத்து அரசியல் கட்சிகளும் தீவிரமாக முன்னெடுத்து வருகின்றன. திமுக, ஓரணியில் தமிழ்நாடு என உறுப்பினர் சேர்க்கையை தீவிரப்படுத்தி வருகிறது. அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, சுற்றுப் பயணம் மேற்கொண்டு வருகிறார்.

ADVERTISEMENT

இந்த வரிசையில் தமிழக வெற்றிக் கழகமும் தீவிர தேர்தல் பணிகளில் களமிறங்குகிறது. இது தொடர்பாக இன்று அக்கட்சியின் மாவட்ட செயலாளர்கள் ஆலோசனைக் கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் தற்போது இந்த கூட்டம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இந்த மா.செ.க்கள் கூட்டத்தில் மதுரையில் ஆகஸ்ட் 25-ந் தேதி நடைபெறும் கட்சியின் 2-வது மாநில மாநாடு, விஜய் சுற்றுப் பயணம் உள்ளிட்டவை குறித்து விவாதிக்கப்பட இருந்தது.

மேலும் உறுப்பினர் சேர்க்கைக்கான புதிய செயலியும் (App) இன்றைய கூட்டத்தில் அறிமுகப்படுத்தப்பட இருந்தது. இந்த செயலியை எப்படி பயன்படுத்துவது என்பது தொடர்பான பயிற்சிகளும் வழங்கப்பட இருக்கிறது என்கின்றன தவெக வட்டாரங்கள்.

ADVERTISEMENT
Photo of author
Mathi

30 ஆண்டுகள் ஊடகத் துறை அனுபவம், அச்சு, இணையம், வானொலி, தொலைக்காட்சி ஊடகங்களில் பணியாற்றியவர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share