மருத்துவ மாணவர்களுக்கு லீவு இல்லை
நேஷனல் மெடிக்கல் கமிஷன் (National Medical Commission – NMC), நீட் யுஜி (NEET UG) 2026 தேர்வை முன்னிட்டு முக்கிய அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
மே 2 மற்றும் மே 3 தேதிகளில் மருத்துவ மாணவர்களுக்கு விடுமுறை (leave) வழங்கக்கூடாது என அனைத்து மெடிக்கல் கல்லூரிகளுக்கும் உத்தரவு விடுக்கப்பட்டுள்ளது.
இந்த உத்தரவு வெளியிடப்பட்ட முக்கிய காரணம் தேர்வு பாதுகாப்பை (exam security) உறுதி செய்ய, முறைகேடுகளை (malpractice) தடுக்க தேர்வின் புனிதத்தன்மை (sanctity) மற்றும் நேர்மையை (integrity) பாதுகாக்க என்பதாகும்.
என்.எம்.சி தெளிவாக தெரிவிக்கையில், சாதாரண காரணங்களுக்கு விடுமுறை கிடையாது. மிக அவசரமான சூழ்நிலை (exceptional circumstances) இருந்தால் மட்டுமே அனுமதி.
அனைத்து மெடிக்கல் கல்லூரிகளுக்கும் மாணவர்களை விழிப்புணர்வு செய்ய (sensitize students), தேர்வுக்கு எதிரான செயல்களில் ஈடுபடாமல் இருக்க சொல்ல, கடுமையான கண்காணிப்பு (strict monitoring) வைக்க என்று உத்தரவிடப்பட்டுள்ளது.
முக்கிய தேர்வு விவரங்கள்
நீட் யுஜி 2026 தேர்வு:
தேதி: மே 3, 2026
முறை: பென் அண்ட் பேப்பர் மோடு (pen and paper mode)
அட்மிட் கார்டு (Admit Card) வெளியீடு: ஏப்ரல் 26, 2026.
இந்த “லீவு தடை” முடிவு, தேர்வின் நம்பகத்தன்மையை பாதுகாக்கும் முக்கிய நடவடிக்கை. நண்பர்களே, இப்போ முழு கவனம் (focus) தயாரிப்பில் இருக்க வேண்டும், சரியான முறையில் எழுதும் தேர்வில்தான் உண்மையான வெற்றி.
