தனுஷின் ‘நானே வருவேன்’ படத்தின் புதிய போஸ்டர்கள்!

Published On:

| By Prakash

தனுஷ் நடித்திருக்கும் ’நானே வருவேன்’ படத்தின் புதிய போஸ்டர்கள் இன்று (ஆகஸ்ட் 22) வெளியிடப்பட்டு, விரைவில் இப்படம் திரைக்கு வரும் என தயாரிப்பாளர் தரப்பில் அறிவிக்கப்பட்டிருப்பதால், தனுஷ் ரசிகர்கள் அதிக உற்சாகத்தில் உள்ளனர்.

தன் சகோதரர் தனுஷை வைத்து துள்ளுவதோ இளமை, காதல் கொண்டேன், புதுப்பேட்டை உள்ளிட்ட வெற்றிப்படங்களைக் கொடுத்தவர் இயக்குநர் செல்வராகவன்.

ADVERTISEMENT

இந்த கூட்டணி 5வது முறையாக இணைந்துள்ள படம் ‘நானே வருவேன்’. கலைப்புலி எஸ்.தாணு தயாரித்துள்ள இந்தப் படத்தின் நாயகியாக இந்துஜா நடித்துள்ளார்.

இதன் படப்பிடிப்பு முடிவடைந்து போஸ்ட் புரொடக்‌ஷன்ஸ் பணிகள் நடைபெற்று வருகின்றன. ஜூலை 27 ஆம் தேதி, இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது.

ADVERTISEMENT

இந்த நிலையில், ’நானே வருவேன்’ படத்தின் இரண்டு புதிய போஸ்டர்களை இன்று (ஆகஸ்ட் 22) தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டிருக்கும் தயாரிப்பாளர் கலைப்புலி எஸ்.தாணு,

இப்படம் விரைவில் தியேட்டர்களில் வெளியாகும் என்ற அறிவிப்பையும் பதிவிட்டுள்ளார். ஏற்கெனவே திருச்சிற்றம்பலம் படத்தின் வெற்றியால் மகிழ்ச்சியில் இருக்கும் தனுஷ் ரசிகர்கள் இப்படத்தின் அறிவிப்பாலும் அதிக மகிழ்ச்சியில் உள்ளனர்.

ADVERTISEMENT

ஜெ.பிரகாஷ்

நானே வருவேன் படப்பிடிப்பு நிறைவு!

Photo of author
Prakash
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share