முடி உதிர்வை குறைத்து முடியை வலுப்படுத்தக்கூடிய 5 காலை பழக்கங்கள் குறித்து விரிவாக பார்க்கலாம்.
இன்றைய மன அழுத்தமான வாழ்க்கை முறையும் ஆரோக்கியமற்ற உணவுப் பழக்கமும் தலைமுடியில் அதிக மாற்றங்களை ஏற்படுத்துகின்றன. குறிப்பாக முடி உதிர்தல், முடியின் நுனியில் பிளவு மற்றும் முடி மெலிதல் ஆகியவை இளம் வயதிலேயே ஏற்படுகின்றன. முடி உதிர்வு பிரச்சனை நமக்கு மிகுந்த மன அழுத்தத்தை (Stress reason for hair loss) உண்டாக்கக் கூடியது. ஆனால், மன அழுத்தம் அதிகமானால் மேலும் முடி உதிர்வுதான் ஏற்படும். ஆகவே, நாம் வாழ்க்கை முறையில் சில மாற்றங்கள் ஏற்படுத்துவதன் மூலம் முடி உதிர்வை குறைக்க முடியும்.
காலையில் எழுந்தவுடன் சில பழக்கங்களை (morning habits) செய்வது நீண்ட, அடர்த்தியான மற்றும் வலுவான முடியைப் பராமரிக்க மிகவும் உதவியாக இருக்கும். முடி வளர்ச்சியை அதிகரிக்க உதவும் 5 காலைப் பழக்கங்கள் என்னவென்று தெரிந்து கொள்வோம். இதனை தொடர்ந்து செய்து வருவதன் மூலம் நீங்கள் எதிர்பார்க்காத ஆச்சரியம் முடியில் ஏற்படும்.
காலையில் எழுந்தவுடன் தண்ணீர் குடியுங்கள்
இரவு நேரத்தில் நமது உடலில் நீர்ச்சத்து குறைகிறது. ஆகவே, காலை தூங்கி எழுந்தவுடன் (Morning Drink water) முதல் வேலையாக 1 – 2 டம்ளர் தண்ணீர் குடிக்க வேண்டும். இது உங்கள் ஆரோக்கியத்திற்கு நன்மை தரும். இது உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்றவும், உச்சந்தலைக்கு ஈரப்பதம் அளிக்கவும், கூந்தலுக்கு ஊட்டமளிக்கவும் உதவுகிறது.
உச்சந்தலையை மசாஜ் செய்யலாம்
ஒவ்வொரு காலையும் சில நிமிடங்களுக்கு உங்கள் விரல் நுனிகளால் (Massage your scalp) உச்சந்தலையை மென்மையாக மசாஜ் செய்யலாம். இது உச்சந்தலையில் ரத்த ஓட்டத்தை மேம்படுத்துவதோடு, முடி வேர்களுக்குத் தேவையான ஊட்டச்சத்துக்களையும் வழங்குகிறது. உங்கள் தலைமுடியைத் தவறாமல் மசாஜ் செய்வது, அதை வலுவாகவும் ஆரோக்கியமாகவும் வைத்திருக்க உதவுகிறது.
புரதம் நிறைந்த காலை உணவு
வலுவான முடியைப் பராமரிக்க உடலுக்குப் போதுமான புரதம் (protein rich breakfast) தேவைப்படுகிறது. உங்கள் காலை உணவில் பருப்பு வகைகள், முட்டை, சீஸ், பால், தயிர் மற்றும் கொட்டைகள் போன்ற உணவுகளைச் சேர்த்துக் கொள்ளுங்கள். புரதம் முடியை வேரிலிருந்து வலுப்படுத்துவதோடு, முடி உதிர்வைக் குறைக்கவும் உதவுகிறது.
ஹேர் சீரம் தடவ வேண்டும்
வீட்டை விட்டு வெளியே கிளம்பும் முன், உங்கள் தலைமுடிக்கு லேசான ஹேர் சீரம் (apply hair serum) தடவ வேண்டும். இது முடியை வெயில், தூசி மற்றும் மாசுபாட்டிலிருந்து பாதுகாக்கிறது. இது முடியின் பளபளப்பைப் பராமரிப்பதுடன், அது அதிகப்படியாக வறண்டு போவதையும் தடுக்கிறது.
யோகா மற்றும் தியானம் பயிற்சி
மன அழுத்தமும் முடி உதிர்வதற்கான ஒரு முக்கிய காரணமாகக் கருதப்படுகிறது. ஆகவே, காலையில் சில நிமிடங்கள் யோகா அல்லது தியானம் செய்வது (yoga and meditation) மன அழுத்தத்தைக் குறைக்கும். இது முடியின் ஆரோக்கியத்தில் நேர்மறையான தாக்கத்தை ஏற்படுத்துவதோடு, முடி வளர்ச்சியையும் மேம்படுத்துகிறது. இத்துடன் முடிக்கு ஊட்டமளிக்கும் உணவுகளையும் சரியாக சேர்த்துவர நாம் எதிர்பார்த்த மாற்றம் முடியில் கிடைக்கும்.
