Rain Update: தமிழ்நாட்டில் மழைக்கு வாய்ப்புள்ளதா?

By Manjula

|

Published on 25 Mar 2024, 2:39 PM

தமிழ்நாட்டில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக, வானிலை மையம் அறிக்கை வெளியிட்டுள்ளது.

இதுகுறித்து வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ”இன்று (மார்ச் 25) தொடங்கி மார்ச் 3௦ வரை தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதியில் வறண்ட வானிலை நிலவக்கூடும்.

ADVERTISEMENT

மார்ச் 31 தமிழகத்தின் தென் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்யக்கூடும். வட தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும்.

இன்று தொடங்கி மார்ச் 29 வரை தமிழகத்தின் அதிகபட்ச வெப்பநிலை 2-3 டிகிரி செல்சியஸ் அதிகரிக்கக்கூடும். அதிக வெப்பநிலை மற்றும் அதிக ஈரப்பதம் இருக்கும் பொழுது ஓரிரு இடங்களில் அசௌகரியம் ஏற்படலாம்.

ADVERTISEMENT

IPL 2024: ஹர்திக் ரசிகரை கடுமையாக தாக்கிய ரோஹித் ரசிகர்கள்… வீடியோ வைரல்!

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 34-35 டிகிரி செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 25-26 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.

ADVERTISEMENT

கடந்த 24 மணிநேரத்தில் மழை எதுவும் பதிவாகவில்லை. மீனவர்களுக்கான எச்சரிக்கை ஏதுமில்லை”, என தெரிவித்துள்ளது.

தமிழ்நாட்டில் வெப்பநிலை அதிகம் பதிவாகியுள்ள இடம் குறித்தும், வானிலை மையம் தகவல் வெளியிட்டுள்ளது. அதன்படி சேலம் மாவட்டம் 38.8 டிகிரி செல்சியஸ் உடன் முதலிடத்தை பிடித்துள்ளது.

தென் தமிழக மாவட்டங்கள்: ராமநாதபுரம், திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி, தேனி, கன்னியாகுமரி, சிவகங்கை, விருதுநகர், திண்டுக்கல், மதுரை.

வட தமிழக மாவட்டங்கள்: சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர், கடலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை.

புதுக்கோட்டை, வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி, சேலம், தர்மபுரி, நாமக்கல், நீலகிரி, திருப்பூர், கோயம்புத்தூர், ஈரோடு, கரூர், திருச்சிராப்பள்ளி, அரியலூர், பெரம்பலூர்.

-மஞ்சுளா 

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

அந்த 2 வேட்பாளர்கள் எப்போது அறிவிக்கப்படுவார்கள்? : செல்வப்பெருந்தகை பதில்!

”குறட்டையால் இதய நோய் ஏற்பட அதிக வாய்ப்பு” : மருத்துவர் ப.விஜயகிருஷ்ணன்

Meetha Ragunath: காதலில் ‘விழுவேன்’ என நினைக்கவில்லை… வைரலாகும் ‘குட் நைட்’ நடிகையின் பதிவு!

உண்மையின் மூச்சு உங்கள் விரலில்

மின்னம்பலம் மக்களுக்கான தனது சமரசமற்ற செய்திப் பணியைத் தொடர்ந்திட துணை நில்லுங்கள்.

Manjula

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!

Join Our Channel