‘குட் நைட்’ புகழ் மீதா ரகுநாத் சமீபத்தில் தன்னுடைய காதலரை மணந்து, திருமண வாழ்க்கையில் அடியெடுத்து வைத்தார்.
‘முதல் நீ முடிவும் நீ’, ‘குட் நைட்’ என இரண்டே படங்களில் நடித்திருந்த மீதா திருமண பந்தத்தில் இணைந்தது அனைவருக்கும் இனிய அதிர்ச்சியாக இருந்தது.
இந்தநிலையில் திருமணம் மற்றும் காதல் கணவர் குறித்து, மீதா ரகுநாத் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து கொண்டுள்ளார்.
அதில், “பாரம்பரியமான படுகா முறையில் திருமணம் நடைபெற்றது நான் எதிர்பார்க்காத ஒன்று. நான் காதலில் விழுவேன் என எதிர்பார்க்கவில்லை.
ஆனால் நான் அதை செய்தேன். அதே போல நான் எதிர்பார்க்காத ஒன்று தான் படுகா திருமணம். அது ஒரு அழகான கொண்டாட்டமாக இருந்தது.
“மதில்” என்பது வில் போன்ற அமைப்பாகும், இது ஒவ்வொரு பாரம்பரிய படுகா குடும்பத்திலும் ஒரு புனித இடமாகும்.
நாங்கள் படுகா கிராமத்தில் திருமணம் செய்து கொள்ளவில்லை என்றாலும் எங்களின் திருமணம் கலாச்சாரத்தோடு நெருக்கமானதாக இருக்க வேண்டும் என்பதை மட்டும் விரும்பினோம்.
GT Vs MI: எங்களுக்கெல்லாம் ‘ஜாலியா’ தான் இருக்கு… ‘மீம்ஸ்’ போட்டு கிண்டலடிக்கும் ரசிகர்கள்!
என்னுடைய வீட்டில் உள்ளவர்கள் கலை மேதைகள் என்பதால் மதில் மற்றும் அதைச் சுற்றிய அலங்காரங்களை என்னுடைய அம்மா யோசனையாக சொல்ல, அதை என்னுடைய சகோதரி முழுமையாக வடிவமைத்தார்.
என்ன வண்ணங்கள் உபயோகிக்க வேண்டும் என அனைத்தையும் அவர்களே வடிவமைத்தனர். இந்தத் திருமணத்தின் பெரும்பகுதி கலைநயத்தோடு இருந்தது. அன்பை கண்டுபிடிப்பது என்பது தெய்வீகமான ஒரு தருணம்.
ஆனால் அப்படிப்பட்ட அன்பு உங்கள் கண்முன்னால் தோன்றும் போது அதை அடையாளம் காணும் திறனும் அதை அடையும் தைரியமும் இருக்க வேண்டும்.
அதை எனக்கு வழங்கிய இந்த பிரபஞ்சத்திற்கு நான் நன்றி உள்ளவளாக இருப்பேன். நான் காதலித்தேன், திருமணம் செய்து கொண்டேன்.
ஆனால் அது ஒரு பாரம்பரியமான படுகா முறை திருமணமாக அமைந்தது போனஸ்”, என முதன்முறையாக தன்னுடைய திருமணம் குறித்து வெளிப்படையாக பேசியுள்ளார்.
மீதா ரகுநாத்தின் இன்ஸ்டாகிராம் பதிவு தற்போது வைரலாகி வருகிறது. அவருக்கு ரசிகர்கள், பிரபலங்கள் உட்பட பலரும் தங்களுடைய வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.
-மஞ்சுளா
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
GOLD RATE: மீண்டும் விலை ஏறிய தங்கம்… சவரன் எவ்ளோன்னு பாருங்க!
திருமாவுக்கு ஆதரவாக களமிறங்கிய வன்னியர் கட்சி: அரசியல், சமூக மாற்றத்துக்கு வித்திடுமா?
”கணேசமூர்த்தி உயிர்பிழைக்க 50-50 தான் வாய்ப்பு உள்ளது” : வைகோ கவலை!