அரசு ஊழியர்களுக்கு 4% அகவிலைப்படி உயர்வு: முதல்வர் அறிவிப்பு!

Published On:

| By christopher

அரசு அலுவலர்கள்‌ மற்றும்‌ ஆசிரியர்களுக்கு இந்தாண்டு ஏப்ரல் முதல் 4 சதவீத அகவிலைப்படி உயர்த்தி வழங்கப்படும்‌ என்று முதலமைச்சர்‌ மு.க.ஸ்டாலின்‌ அறிவித்துள்ளார்.

இதுகுறித்து தமிழ்நாடு அரசு இன்று(மே 17) வெளியிட்டுள்ள அறிக்கையில், “அரசின்‌ திட்டங்களை மக்களிடம்‌ கொண்டு சேர்க்கும்‌ பெரும்பணியில்‌ தங்களை அர்ப்பணித்து செயல்படும்‌ அரசு அலுவலர்கள்‌ மற்றும்‌ ஆசிரியர்களின்‌ பங்கினை முழுமையாக உணர்ந்துள்ள இந்த அரசு, அவர்களின்‌ நலனை தொடர்ந்து பாதுகாத்து வருகின்றது.

ADVERTISEMENT

இந்த அரசு பொறுப்பேற்ற நாளிலிருந்து, கடந்த அரசு விட்டுச்‌ சென்ற கடும்‌ நிதிநெருக்கடி மற்றும்‌ கடன்‌ சுமை, கோவிட்‌ பெருந்தொற்றால்‌ ஏற்பட்ட வருவாய்‌ இழப்பு ஆகியவற்றுக்கு இடையேயும்‌,

அரசு அலுவலர்கள்‌ மற்றும்‌ ஆசிரியர்களின்‌ பல்வேறு கோரிக்கைகள்‌ குறித்த வாக்குறுதிகளைப்‌ படிப்படியாக நிறைவேற்ற முனைப்புடன்‌ இந்த அரசு செயல்பட்டு வருகின்றது.

ADVERTISEMENT

இந்த வகையில்‌, அரசு அலுவலர்கள்‌ மற்றும்‌ ஆசிரியர்கள்‌ தொடர்ந்து வலியுறுத்தி வரும்‌ கோரிக்கையான அகவிலைப்படி உயர்வு குறித்து கனிவுடன்‌ பரிசீலித்து, இந்த உயர்வினை 01.04.2023 முதல்‌ செயல்படுத்திட தமிழ்நாடு முதலமைச்சர்‌ மு.க. ஸ்டாலின்‌ உத்தரவிட்டுள்ளார்கள்‌.

இதன்படி, தற்போது 38சதவீதமாக உள்ள அகவிலைப்படி 01.04.2023முதல்‌ 42சதவீதமாக உயர்த்தப்பட்டு வழங்கப்படும்.‌

ADVERTISEMENT

இதனால்‌, சுமார்‌ 16 இலட்சம்‌ அரசு அலுவலர்கள்‌, ஆசிரியர்கள்‌, ஓய்வூதியதாரர்கள்‌ மற்றும்‌ குடும்ப ஓய்வூதியதாரர்கள்‌ பயன்பெறுவார்கள்‌.

இந்த உயர்வால்‌ ஆண்டு ஒன்றிற்கு தமிழ்நாடு அரசுக்கு 2,366.82கோடி ரூபாய்‌ கூடுதல்‌ செலவினம்‌ ஏற்படும்‌.

எனினும்‌, அரசு அலுவலர்கள்‌, ஆசிரியர்கள்‌ மற்றும்‌ ஓய்வூதியதாரர்கள்‌ நலன்‌ கருதி இந்தக்‌ கூடுதல்‌ நிதியை அரசு ஒதுக்கீடு செய்யும்‌.

மேலும்‌, அரசு அலுவலர்கள்‌ மற்றும்‌ ஆசிரியர்கள்‌ தொடர்ந்து வலியுறுத்தி வரும்‌ கோரிக்கையைக்‌ கனிவுடன்‌ பரிசீலித்து,

எதிர்வரும்‌ காலங்களிலும்‌ ஒன்றிய அரசு அகவிலைப்படி உயர்வை அறிவிக்கும்போதெல்லாம்‌, உடனுக்குடன்‌ தமிழ்நாடு அரசும்‌ அதைப்‌ பின்பற்றி அரசு அலுவலர்‌ மற்றும்‌ ஆசிரியர்களுக்கும்‌ அகவிலைப்படி உயர்வைச்‌ செயல்படுத்திடும்‌.” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கிறிஸ்டோபர் ஜெமா

கேன்ஸ் 2023: சிவப்பு கம்பளத்தில் வேட்டியுடன் நடைபோட்ட எல்.முருகன்

லைகா நிறுவன அமலாக்கத்துறை சோதனை நிறைவு!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share