கேன்ஸ் 2023: சிவப்பு கம்பளத்தில் வேட்டியுடன் நடைபோட்ட எல்.முருகன்

Published On:

| By christopher

கேன்ஸ் திரைப்பட விழாவில் சிவப்பு கம்பள வரவேற்பில் தமிழ் பாரம்பரிய அடையாளமான வேஷ்டி சட்டை அணிந்து பங்கேற்பதில் ஒரு தமிழனாய் பெருமிதம் கொள்வதாக மத்திய இணையமைச்சர் எல். முருகன் தெரிவித்துள்ளார்.

புகழ்பெற்ற கேன்ஸ் திரைப்பட விழா பிரான்சில் இன்று முதல் மே 27 ஆம் தேதி வரை நடைபெற உள்ளது.

இந்த திரைப்பட விழாவில் பங்கேற்க மத்திய தகவல், ஒலிபரப்புத் துறை இணையமைச்சா் எல்.முருகன் தலைமையில், இந்தியக் குழு நேற்று (மே 16) பிரான்ஸ் புறப்பட்டு சென்றனர்.

பல்வேறு நாட்டை சேர்ந்த பிரபலங்கள் கலந்து கொள்ளும் இந்த 76வது கேன்ஸ் திரைப்பட விழாவின் தொடக்க நாளான இன்று பல்வேறு நாடுகளைச் சேர்ந்த பிரபலங்களும் சிவப்பு கம்பளத்தில் நடைபோட்டனர்.

அந்த வகையில் தமிழ்ப் பாரம்பரிய உடையான பட்டு ‘வேஷ்டி’ அணிந்து, G20India மற்றும் தேசிய கொடி சின்னம் பதித்த உடையில் தென்னிந்திய மற்றும் தமிழகத்தின் கலாசாரத்தை வெளிப்படுத்தும் வகையில் மத்திய இணையமைச்சர் எல்.முருகன் சிவப்புக் கம்பளத்தில் நடந்து வந்தார்.

இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், “உலகப்புகழ்பெற்ற கேன்ஸ் திரைப்பட விழாவில் இன்று நடைபெற்ற சிவப்புக் கம்பள வரவேற்பில் தமிழ் பாரம்பரிய அடையாளமான வேஷ்டி சட்டை அணிந்து பங்கேற்பதில் ஒரு தமிழனாய் பெருமிதம் கொள்கிறேன்.

ஜி20 மாநாட்டிற்கு இந்தியா தலைமையேற்றுள்ள இந்த தருணத்தில் #G20India சின்னம், நமது தேசியக்கொடி பொறித்த பாரம்பரிய ஆடையை அணிந்து உலக அரங்கில் அடியெடுத்து வைப்பது ஒவ்வொரு இந்தியருக்கும், தமிழருக்கும் பெருமிதமான தருணம்.” என்று குறிப்பிட்டுள்ளார்.

union minister l murugan wears vesti in cannes festival
ஈஷா குப்தா, சாரா அலிகான், மனுஷி சில்லர்

அவருடன், கேன்ஸ் திரைப்பட விழாவில் ஆஸ்கர் வென்ற ‘தி எலிஃபண்ட் விஸ்பரா்ஸ்’ ஆவணப்பட புகழ் திரைப்படத் தயாரிப்பாளா் குனீத் மோங்கா, இந்திய நடிகைகள் மனுஷி சில்லா்,  ஈஷா குப்தா, ஐஸ்வர்யா ராய் பச்சன்,

சாரா அலி கான், அனுஷ்கா சர்மா மிருணாள் தாக்கூர் மற்றும் மணிப்புரி நடிகா் கங்காபம் டோம்பா ஆகியோரும் கலந்துகொண்டு சிவப்பு கம்பளத்தில் ஒய்யாரமாக நடைபோட்டனர்.

மேலும் இந்த விழாவில் நாட்டின் பிரதிநிதியாக நடிகையும், தேசிய மகளிர் ஆணைய உறுப்பினருமான குஷ்பூவும் கலந்துக்கொள்ள உள்ளார்.

கேன்ஸ் திரைப்பட விழாவில் இந்தியாவில் இருந்து 3 படங்கள் திரையிடப்படவுள்ளன.

அனுராக் காஷ்யப் இயக்கிய ‘கென்னடி’ படம் மிட்நைட் ஸ்கீரினிங் (Midnight Screenings section) பிரிவிலும் ராகுல் ராய் நடித்த ‘ஆக்ரா’ படம் ஃபோர்ட்நைட் (Fortnight section) பிரிவிலும் மற்றும் மணிப்பூரில் 1990 ஆம் ஆண்டு வெளியான ‘இஷானோ’ படம் ப்ரஸ்டீஜியஸ் கேன்ஸ் கிளாசிக் (prestigious Cannes Classic section) பிரிவிலும் திரையிடப்படவுள்ளன. 

கிறிஸ்டோபர் ஜெமா

விமர்சனம்: குட்நைட்!

முதல்வர் ரேஸ்: ராகுலை சந்திக்கும் சித்தராமையா. டி.கே.சிவக்குமார்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel

Leave a Comment