மீண்டும் கொரோனா: சோனியா குணமடைய ஸ்டாலின் விருப்பம்!

Published On:

| By Minnambalam

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி விரைவில் குணமடைய வேண்டும் என தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

சோனியா காந்திக்கு மீண்டும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக காங்கிரஸ் கட்சியை சேர்ந்த ஜெய்ராம் ரமேஷ் இன்று ( ஆகஸ்ட் 13 ) தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்திருந்தார்.

ADVERTISEMENT

ஏற்கனவே கடந்த ஜூன் மாதம் 2 ஆம் தேதி அவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். தொற்று குணமடைந்து ஓய்வு எடுத்ததை அடுத்து அவர் வீடு திரும்பினார்.

இந்நிலையில், அவருக்கு மீண்டும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனையடுத்து சோனியா காந்தி விரைவில் கொரோனா தொற்றில் இருந்து குணமடைய வேண்டும் என தலைவர்கள் பலர் வாழ்த்தி வருகின்றனர்.

ADVERTISEMENT

இந்நிலையில் , தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், ”இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் தலைவர் சோனியா காந்திக்குக் கொரோனா தொற்று ஏற்பட்டிருப்பது கவலையளிக்கிறது.

அவர் விரைவாகவும் முழுமையாகவும் குணமடைய விழைகிறேன். விரைவில், மீண்டும் வழக்கம்போல தனது பணிகளில் ஈடுபடுவார் என்று நம்புகிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.

ADVERTISEMENT

மு.வா.ஜெகதீஸ் குமார்

தேசியக் கொடி : செய்ய வேண்டியதும், செய்யக்கூடாததும்!

Photo of author
Minnambalam
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share