“பத்தரை மாற்றுத் தங்கம்” : பசும்பொன்னில் ஸ்டாலின்

Published On:

| By Kavi

முத்துராமலிங்கத் தேவரின் ஜெயந்தி மற்றும் குருபூஜை விழா பசும்பொன்னில் இன்று (அக்டோபர் 30) கொண்டாடப்பட்டு வருகிறது.

இந்தநிலையில் தமிழக அரசியல் கட்சியினர், சென்னை நந்தனம், மதுரை கோரிப்பாளையம், ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன் ஆகிய இடங்களில் உள்ள தேவர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி வருகின்றனர்.

ADVERTISEMENT

சென்னை நந்தனத்தில் உள்ள தேவர் சிலைக்கு முதல்வர் விஜய் மரியாதை செலுத்தினார்.

முன்னாள் முதல்வரும் திமுக தலைவருமான ஸ்டாலின் முதலில் இன்று காலை மதுரை கோரிப்பாளையத்தில் உள்ள தேவர் சிலைக்கு மரியாதை செலுத்தினார்.

ADVERTISEMENT

அதைத்தொடர்ந்து கார் மூலம் பசும்பொன் சென்று அவர், குரு பூஜையில் கலந்து கொண்டு, தேவர் நினைவிடத்திலும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

முன்னாள் அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, மூர்த்தி, முன்னாள் எம்எல்ஏக்கள், திமுக நிர்வாகிகள் பலரும் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர்.

ADVERTISEMENT

தொடர்ந்து முத்துராமலிங்க தேவரை நினைவு கூர்ந்து முன்னாள் முதல்வர் ஸ்டாலின் தனது எக்ஸ் பக்கத்தில், “வரலாறாய் வாழ்ந்து, வீரத்துக்கும் தியாகத்துக்கும் எடுத்துக்காட்டாக நிலைத்து நிற்கும் பசும்பொன் திருமகனாரைப் போற்றுகிறேன்!

விடுதலைப் போரில் நேதாஜியுடன் இணைந்து செயலாற்றிய தீரர்!

குற்றப் பரம்பரைச் சட்டத்தை எதிர்த்து, பிற்படுத்தப்பட்ட சமூகங்களின் உரிமைகளுக்காகப் போராடிய போராளி!

 உழவர்களின் நலனுக்காகவும் தொழிலாளர்களின் உரிமைகளுக்காகவும் சங்கங்களை நிறுவியவர்; போராடிச் சிறை சென்ற தியாகி!

சட்டமன்றத்திலும் நாடாளுமன்றத்திலும் மக்களுக்காகக் குரல் கொடுத்த மாண்பாளர்!

“பத்தரை மாற்றுத் தங்கம்! பசும்பொன் சிங்கம்!” என்று மக்களால் போற்றப்பட்ட பசும்பொன் திருமகனாரின் புகழ் வாழ்க!” என்று புகழாரம் சூட்டியுள்ளார்.

Photo of author
Kavi

சமூகம், அரசியல், நீதி நிர்வாகம் சார்ந்த பிரச்சினைகள் குறித்து 2016ஆம் ஆண்டிலிருந்து எழுதி வருகிறார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share