2029ல் ராகுல் காந்திதான் பிரதமர் வேட்பாளர் – அமைச்சர் விஸ்வநாதன் திட்டவட்டம்

Published On:

| By Pandeeswari Gurusamy

2029 நாடாளுமன்ற தேர்தலில் இந்தியா கூட்டணியின் பிரதமர் வேட்பாளர் ராகுல் காந்திதான் என அமைச்சர் விஸ்வநாதன் தெரிவித்துள்ளார்.

திருச்சியில் இன்று (ஆகஸ்ட் 30) செய்தியாளர்களிடம் பேசிய உயர்கல்வித்துறை அமைச்சர் விஸ்வநாதன், “இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் பிரதமர் வேட்பாளர் 2029-ல் பாராளுமன்றத்தின் எதிர்க்கட்சித் தலைவரும், அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான அன்பிற்குரிய எங்கள் தலைவர் ராகுல் காந்தியே முன்னிறுத்தப்படுவார்.

ADVERTISEMENT

அவரை பிரதமர் வேட்பாளராக முன்னிறுத்துவதோடு மட்டுமல்லாமல், கடந்த 15 ஆண்டுகளாக மக்கள் வெறுப்பில் இருக்கிறார்கள்; மக்கள் ஏமாற்றமடைந்துள்ளனர். நரேந்திர மோடி அரசாங்கத்தின் மீது மக்கள் நம்பிக்கை இழந்துள்ளனர். 2029-ல் எங்கள் தலைவர் ராகுல் காந்திதான் பிரதமர். பிரதமராகுவதற்கு நாங்கள் ஒற்றைக் குரலில் நிற்போம்” எனத் தெரிவித்துள்ளார்.

இந்தியாவின் அடுத்த பிரதமராகும் தகுதி முதல்வர் விஜய்க்கு உள்ளது என மூத்த அமைச்சர் செங்கோட்டையன் உள்ளிட்ட தவெகவினர் தெரிவித்து வரும் நிலையில், அமைச்சர் விஸ்வநாதனின் இந்தக் கருத்து அரசியல் வட்டாரத்தில் உற்றுநோக்கப்படுகிறது.

ADVERTISEMENT
Photo of author
Pandeeswari Gurusamy

ஊடகத்துறையில் கடந்த 2010-ஆம் ஆண்டு முதல் பணியாற்றி வரும் பாண்டீஸ்வரி குருசாமி, 'தீக்கதிர்' நாளிதழ் & இணையதளம் மற்றும் 'இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ்' ஆகிய நிறுவனங்களில் பணியாற்றியவர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share