கிச்சன் கீர்த்தனா: தினை – ராகி டோக்ளா

Published On:

| By Minnambalam

புரதச்சத்து, இரும்புச்சத்து, பீட்டா கரோட்டின், பாஸ்பரஸ், கால்சியம் நிறைந்த தினை அனைவருக்கும் ஏற்றது. குறிப்பாக, அதிக அளவு உடல் உழைப்பு செய்பவர்கள், உடற்பயிற்சி செய்பவர்கள், பள்ளி செல்லும் குழந்தைகள், விளையாட்டு வீரர்களுக்கு ஏற்ற உணவு. இந்த தினை – ராகி டோக்ளா இந்த வீக் எண்ட் ஸ்பெஷலாக இருக்கும்.

என்ன தேவை?

ADVERTISEMENT

தினை, ராகி மாவு – தலா அரை கப்
தேங்காய்த் துருவல் – கால் கப்
நறுக்கிய மல்லித்தழை – ஒரு டேபிள்ஸ்பூன்
பச்சை மிளகாய் – 2 (நீளவாக்கில் வெட்டவும்)
மஞ்சள் தூள், பெருங்காயத்தூள் – தலா ஒரு சிட்டிகை
உப்பு, எண்ணெய் – தேவையான அளவு

தாளிக்க…

ADVERTISEMENT

கடுகு, சீரகம், பொடியாகத் துருவிய இஞ்சி, ஃப்ரூட் சால்ட் (டிபார்ட்மென்டல் ஸ்டோர்களில் கிடைக்கும்) – தலா ஒரு டீஸ்பூன்
தயிர் – அரை கப்

எப்படிச் செய்வது?

ADVERTISEMENT

ஒரு பாத்திரத்தில் தினை மாவு, ராகி மாவு, உப்பு, தயிர், இஞ்சி, பச்சை மிளகாய், மஞ்சள் தூள், பெருங்காயத்தூள் சேர்த்து நீர் விட்டு, இட்லி மாவுப் பதத்துக்குக் கலந்து, ஒன்றரை மணி நேரம் மூடிவைக்க வேண்டும். பிறகு கடுகு, சீரகம் தாளித்து அதில் கொட்டி, ஃப்ரூட் சால்ட்டை கலக்கவும். இட்லித் தட்டில் எண்ணெய் தடவி வேகவிட்டு, மல்லித்தழை, தேங்காய்த் துருவல் தூவிப் பரிமாறவும்.

கம்பு இட்லி

கோதுமை பிரெட் – பனீர் சாண்ட்விச்

Photo of author
Minnambalam
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share