வளரும் குழந்தைகளுக்கு ஆரோக்கியமான உணவைத் தர வேண்டியது அவசியம். அந்த வகையில் சரிவிகித ஊட்டச்சத்துகள் நிறைந்த, எளிதில் தயாரிக்க ஏற்ற இந்த கோதுமை பிரெட் – பனீர் சாண்ட்விச் செய்து கொடுக்கலாம்.
இதில் பனீர், வெண்ணெய் சேர்ப்பதால், உடலுக்கு நல்ல கொழுப்பு அதிகம் கிடைக்கும். உடனடி எனர்ஜி தரும்.
என்ன தேவை?
கோதுமை பிரெட் – 6
பனீர் துருவல் – கால் கப்
தக்காளி – 2 (வட்டமாக வெட்டவும்)
வெங்காயத்தாள் (பொடியாக நறுக்கவும்), கேரட் துருவல் – தலா 2 டேபிள்ஸ்பூன்
இஞ்சி-பூண்டு விழுது, நெய், எண்ணெய், உப்பு, வெண்ணெய் – சிறிதளவு
மிளகாய்த்தூள் – அரை டீஸ்பூன்
எப்படிச் செய்வது?
கடாயில் எண்ணெய்விட்டு சூடானதும், இஞ்சி-பூண்டு விழுது சேர்த்து வதக்கி, வெங்காயத்தாள், கேரட், உப்பு, மிளகாய்த்தூள் சேர்த்து வதக்கி, பனீர் துருவல் போட்டுக் கிளறி இறக்க வேண்டும்.
தவாவில் சிறிது நெய் விட்டு, பிரெட்டை இருபுறமும் டோஸ்ட் செய்ய வேண்டும். பிரெட் நடுவில் வெண்ணெயைத் தடவி, பனீர் மசாலா, தக்காளி வைத்து, பரிமாறவும்.
குறிப்பு: பிரெட் டோஸ்டர் இருந்தால், அதிலேயே சாண்ட்விச் செய்துகொள்ளலாம்.