அதிக இரும்புச்சத்தைக் கொண்டது கம்பு. ரத்தசோகையைத் தடுக்கும் கம்பு இட்லி, பசியைத் தூண்டும். மலச்சிக்கலைப் போக்கும். குடல்புண், வாய்ப்புண்களை நீக்கும். அனைவருக்கும் ஏற்ற இந்தக் கம்பு இட்லியை வாரத்துக்கு ஒருமுறை செய்து சாப்பிடலாம்.
என்ன தேவை?
கம்பு, புழுங்கல் அரிசி – தலா ஒரு கப்
பாசிப்பருப்பு – ஒரு டேபிள்ஸ்பூன்
துவரம்பருப்பு – அரை கப்
கடலைப்பருப்பு – கால் கப்
பெருங்காயத்தூள் – ஒரு சிட்டிகை
உளுந்து – 2 டேபிள்ஸ்பூன்
கடுகு (தாளிக்க) – அரை டீஸ்பூன்
உப்பு, எண்ணெய் – தேவையான அளவு
எப்படிச் செய்வது?
கம்பு அரிசியைக் கழுவி, தண்ணீர் விட்டு மூன்று மணி நேரம் ஊறவைக்கவும். பருப்புகளை ஒரு மணி நேரம் தனித்தனியாக ஊறவைக்க வேண்டும். நன்கு ஊறியதும், மிக்ஸியில், பருப்புகளை நுரைக்க அரைத்து, பின்னர், கம்பைச் சேர்த்து அரைக்கவும். உப்பு சேர்த்துக் கரைத்து, 10 மணி நேரம் வைத்திருந்து, மறுநாள் கடுகு, பெருங்காயத் தூளைத் தாளித்து, அதில் கொட்டி இட்லித் தட்டில் ஊற்றி இட்லி தயாரிக்க வேண்டும். வெங்காயச் சட்னியுடன் சாப்பிடலாம்.
கோதுமை பிரெட் – பனீர் சாண்ட்விச்