சளி பிரச்சனை முதல் தூக்கம் வரை.. பால் குடிப்பதால் ஏற்படும் நன்மைகள் லிஸ்ட்!

Published On:

| By Santhosh Raj Saravanan

Milk Home Remedies benefits fighting colds to improving sleep

சளிப் பிரச்சனை முதல் நல்ல உறக்கம் வரை பால் குடிப்பது பல்வேறு விதங்களில் நமக்கு நன்மை பயக்கிறது.

நமது வாழ்க்கையில் தினந்தோறும் ஒரு அங்கமாகவே பால் உள்ளது. காலை எழுந்ததும் அந்த நாளை பால் கலந்த டீ அல்லது காஃபி குடிப்பதில் இருந்துதான் தொடங்குகிறோம். இது ஒருபுறம் இருக்க எதுவும் கலக்காமல் பாலை மட்டும் தனியாக குடித்தால் அதில் ஏராளமான நன்மைகள் கிடைக்கின்றன. பல பிரச்சனைகளை பாலின் துணை கொண்டு நாம் குணப்படுத்த முடியும் என்றால் நம்ப முடிகிறதா?. பால் குடிப்பதால் ஏற்படும் நன்மைகள் (Milk Home Remedies) குறித்துப் பார்க்கலாம். பாலில் உயர்தர புரதம் (High quality protein), கால்சியம் மற்றும் வைட்டமின் பி ஊட்டச்சத்துகள் நிறைந்துள்ளன. ஒரு டம்ளர் பாலில் சுமார் 150 கலோரிகள் மற்றும் 8 கிராம் புரதம் உள்ளது. இது எலும்பு ஆரோக்கியம், தசை பராமரிப்பு மற்றும் நோய் எதிர்ப்புச் சக்திக்குத் தேவையான அத்தியாவசிய நுண்ணூட்டச் சத்துக்களை வழங்குகிறது

ADVERTISEMENT

நன்றாக உறங்க உதவிபுரியும் பால்

பலருக்கு தூங்கச் செல்வதற்கு முன்பு ஒரு குவளை சூடான பால் குடிக்கும் பழக்கம் உள்ளது. பாலில் டிரிப்டோஃபான் என்ற அமினோ அமிலம் உள்ளது. இது உடலில் செரோடோனின் மற்றும் மெலடோனின் (Milk helps Better sleep) உற்பத்திக்கு உதவுகிறது. இவை உறக்கத்தை ஒழுங்குபடுத்துகின்றன. சூடான பால் குடிப்பதன் மூலம் உறக்கத்தின் தரம் அதிகரிக்கிறது. உறங்குவதற்கு முன் சூடான பால் குடிக்கும் பழக்கத்தை ஏற்படுத்திக் கொள்வது, உடலுக்கு ஊட்டச்சத்துக்களை வழங்குகிறது. அத்துடன், உடலைத் தளர்த்தி விரைவாக உறங்குவதற்கும் உதவிபுரிகிறது.

ADVERTISEMENT

சளியைக் குணப்படுத்த மஞ்சள் பால்

பல தலைமுறைகளாக சளி மற்றும் இருமலுக்கு மஞ்சள் பால் (Turmeric milk benefits) ஒரு வீட்டு வைத்தியமாகவே இருந்து வருகிறது. மஞ்சளில் உள்ள குர்குமினுக்கு அழற்சி எதிர்ப்பு மற்றும் ஆக்ஸிஜனேற்றத் தடுப்புப் பண்புகள் உள்ளன. இது நோய்த்தொற்றுகளைக் குறைக்காவிட்டாலும், சிறிய நோய்களைக் குறைக்கிறது. மஞ்சள் கலந்த பால் குடிப்பது சளி மற்றும் இருமலை குறைக்கிறது.

ADVERTISEMENT

தொண்டை வலியை குறைக்கும் பால்

தொண்டை வலி அல்லது புண் இருக்கும்போது,​​தேன் கலந்த சூடான பாலைக் (Milk to relieve sore throat) குடிக்கலாம். இந்தத் தேன் கலந்த பால், தொண்டை எரிச்சல் மற்றும் இருமலைப் போக்க உதவுகிறது. மேலும், சூடான திரவங்கள் தொண்டை பிரச்சனைகளைக் கட்டுப்படுத்துவதாகவும் கருதப்படுகிறது. இருப்பினும், ஒரு வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு தேனைக் கொடுக்கக் கூடாது.

உடலுக்கு ஆற்றலை அதிகரிக்கும் பால்

உடல்நிலை சரியில்லாமல் சோர்வாக இருக்கும்போது பால் அருந்துவது உடலின் ஊட்டச்சத்தை (Milk gives energy) அதிகரிக்கிறது. ஏனெனில் அதில் புரதம், கால்சியம் மற்றும் உடலுக்குத் தேவையான ஆற்றல் ஆகியவை அடங்கியுள்ளன. உடல் பலவீனமாக உணரும்போது பால் அருந்துமாறு ஊட்டச்சத்து நிபுணர்கள் பரிந்துரைக்கிறார்கள். பால் அருந்திய பிறகு உடல் சற்று புத்துணர்வுடன் இருப்பதை நம்மால் உணர முடியும். மொத்தத்தில் பால் எல்லாப் பிரச்சனைகளையும் குணப்படுத்தும் மருந்து அல்ல என்றாலும் தூக்கம், சளி, தொண்டை வலி மற்றும் சோர்வு ஆகியவற்றிற்கு இது ஒரு பாதுகாப்பானதாகும்.

Photo of author
Santhosh Raj Saravanan
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share