மாணவர்களே மைக்ரேஷன் சர்டிபிகேட் வாங்க போறீங்களா.. புது அப்டேட் என்ன பாருங்க

Published On:

| By Pandeeswari Gurusamy

Migration Certificate in Digi Locker

சிபிஎஸ்இ பள்ளிகளில் படித்த 10ம் வகுப்பு 12ம் வகுப்பு மாணவர்களுக்கான இடப் பெயர்வு சான்றுகள் இனி டிஜிட்டல் ஆவணங்களாக மட்டுமே வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

பொதுவாக 10 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்கள் தங்களின் படிப்பை முடிந்த பின் உயர்கல்விக்கு வேறு நிறுவனங்களில் சேர இடம்பெயர்வு சான்றிதழை சமப்பிக்க வேண்டும்.

ADVERTISEMENT

தற்போது மத்திய அரசு டிஜிட்டல் இந்தியா திட்டத்தின் ஒரு பகுதியாக நாட்டில் உள்ள அனைத்து மாணவர்களின் கல்வி சார்ந்த சான்றிதழ்களை ஒரே தளத்தில் சேமிக்க, டிஜி லாக்கர் பயன்பாட்டை சிபிஎஸ்இ கட்டாயமாக்க திட்டமிட்டுள்ளது. இதை பயன்படுத்த மாணவர்களுக்கு ஆறு இலக்க பயனாளி அடையாள எண் வழங்கப்படும்.

இதை பயன்படுத்தி இடம்பெயர்வு சான்றிதழ்கள் தேவைப்படுவோர் ஆன்லைன் வாயிலாக விண்ணப்பித்து டிஜி லாக்கர் செயலி வாயிலாக டிஜிட்டல் ஆவணத்தை இலவசமாகவே பெற்றுக்கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

கட்டாயமாக காகித நகழ் தேவைப்படுவோர் சிபிஎஸ் இ தளத்தில் டூப்ளிகேட் அகாடமிக் டாகுமெண்ட் சிஸ்டம் என்ற பிரிவில் உள்ள https://cbseit.in/cbse/web/dads/List.aspx என்ற இணையதள இணைப்பின் வாயிலாக விண்ணப்பித்து பெற்று கொள்ளலாம்.

Photo of author
Pandeeswari Gurusamy

ஊடகத்துறையில் கடந்த 2010-ஆம் ஆண்டு முதல் பணியாற்றி வரும் பாண்டீஸ்வரி குருசாமி, 'தீக்கதிர்' நாளிதழ் & இணையதளம் மற்றும் 'இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ்' ஆகிய நிறுவனங்களில் பணியாற்றியவர். அரசியல் மற்றும் சமூகம் சார்ந்த செய்திகளைத் தொடர்ந்து எழுதி வரும் இவர், தற்போது 'மின்னம்பலம்' இணைய இதழில் பணியாற்றி வருகிறார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share