தமிழகத்தில் இன்று (ஜூன் 30) பிற்பகலில் ஒரு சவரன் ஆபரணத்தங்கம் ரூ.1,360 வரை உயர்ந்து விற்பனை செய்யப்படுகிறது.
சர்வதேச சந்தை நிலவரம், டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு, போர் பதற்றங்கள் மற்றும் உலகளாவிய தேவை உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் தங்கம் மற்றும் வெள்ளியின் விலை நாள்தோறும் ஏற்ற இறக்கங்களைச் சந்தித்து வருகிறது. அந்த வகையில்,இன்று காலையில் ஒரு கிலோ வெள்ளி ரூ. 5,000 வரை குறைந்த நிலையில் பிற்பகலில் உயர்ந்துள்ளது.
தற்போதைய தங்கத்தின் விலை நிலவரம்
சென்னையில் இன்று காலை 22 கேரட் ஆபரணத்தங்கம் ஒரு கிராம் ரூ.270 குறைந்து ரூ.13,030-க்கு விற்பனை செய்யப்பட்டது. பிற்பகலில் ஒரு கிராம் தங்கம் ரூ. 170 உயர்ந்து ரூ.13,200க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு சவரன் தங்கம் ரூ. 1360 உயர்ந்து ரூ.1,05,600க்கு விற்பனை செய்யப்படுகிறது.
அதேபோல், 18 கேரட் தங்கம் இன்று காலை ஒரு கிராம் ரூ.225 குறைந்து ரூ.10,900-க்கு விற்பனை செய்யப்பட்டது. பிற்பகலில் ஒரு கிராம் ரூ.150 உயர்ந்து ரூ.11,050க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு சரவன் ரூ.1,200 உயர்ந்து ரூ.88,400க்கு விற்பனை செய்யப்படுகிறது.
தற்போதைய வெள்ளி விலை நிலவரம்
சென்னையில் இன்று காலை வெள்ளி விலை ஒரு கிராம் ரூ. 5 குறைந்த நிலையில் பிற்பலில் மீண்டும் ரூ. 5 உயர்ந்துள்ளது. இதனால் ஒரு கிராம் வெள்ளி ரூ.245 க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிலோ வெள்ளி ரூ. 5000 வரை உயர்ந்து ரூ.2,45,000க்கு விற்பனை செய்யப்படுகிறது.
கடந்த 10 நாட்களில் தங்கம் விலை நிலவரம் (ஒரு சவரன்)
| 29-6-2026 | 1,06,400 |
| 28-6-2026 | 1,06,960 |
| 27-6-2026 | 1,06,960 |
| 26-6-2026 | 1,06,400 |
| 25-6-2026 | 1,05,120 |
| 24-6-2026 | 1,06,800 |
| 23-6-2026 | 1,08,480 |
| 22-6-2026 | 1,08,800 |
| 21-6-2026 | 1,08,800 |
| 20-6-2026 | 1,08,800 |
கடந்த 10 நாட்களில் வெள்ளி விலை நிலவரம் (ஒரு கிராம்)
| 29-6-2026 | 245 |
| 28-6-2026 | 245 |
| 27-6-2026 | 245 |
| 26-6-2026 | 245 |
| 25-6-2026 | 230 |
| 24-6-2026 | 240 |
| 23-6-2026 | 250 |
| 22-6-2026 | 255 |
| 21-6-2026 | 255 |
| 20-6-2026 | 255 |
