தமிழக முன்னாள் முதல்வர் கலைஞரின் மனைவியும் முன்னாள் முதல்வர் மு.க.ஸ்டாலின் தாயாருமான தயாளு அம்மாள் உடல்நிலை பாதிப்பால் சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
வயது மூப்பால் ஏற்பட்ட உடல்நல பாதிப்பை தொடர்ந்து தயாளு அம்மாள் இன்று ஜூன் 29-ந் தேதி இரவு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ள தயாளு அம்மாள் உடல்நிலையை மருத்துவர்கள் கண்காணித்து வருகின்றனர்.
மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட குடும்பத்தினர் மருத்துவமனைக்கு சென்று மருத்துவர்களிடம் சிகிச்சை விவரங்களை கேட்டறிந்தனர்.
