முதல்வர் ஸ்டாலினின் தாயார் தயாளு அம்மாள் கோபாலபுரம் இல்லத்தில் வசித்து வருகிறார். நேற்று (மார்ச் 3) இரவு தயாளு அம்மாளுக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டதால், சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர். Dayalu Ammal admitted hospital
உடனடியாக நேற்று இரவு மருத்துவமனைக்கு விரைந்த முதல்வர் ஸ்டாலின், தயாளு அம்மாளுக்கு அளிக்கப்பட்டு வரும் சிகிச்சைகள் குறித்து மருத்துவர்களிடம் கேட்டறிந்தார். அமைச்சர்கள் துரைமுருகன், கே.என்.நேரு, எ.வ.வேலு, எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம், அன்பில் மகேஷ் ஆகியோரும் மருத்துவமனைக்கு சென்று தயாளு அம்மாள் உடல்நிலை குறித்து விசாரித்துள்ளனர்.
தயாளு அம்மாள் விரைவில் நலம் பெற வேண்டும் என்று திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் வலைதள பதிவில், “கலைஞரின் வாழ்க்கை இணையரும், முதல்வர் ஸ்டாலின் தாயாருமான தயாளு அம்மையார் திடீர் உடல் நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள செய்தி அறிந்தோம். உரிய சிகிச்சைகள் எடுத்துக் கொண்டு, விரைவில் அவர் நலம் பெற்று, இல்லம் திரும்ப விழைகிறோம்” என்று தெரிவித்துள்ளார். Dayalu Ammal admitted hospital