தமிழக பள்ளிக் கல்வித்துறையின் பாடத் திட்ட வடிவமைப்புக்கான புதிய குழு, ‘இஸ்ரோ’ விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை தலைமையில் அமைக்கப்பட்டுள்ளது.
பள்ளிக் கல்வித் துறை பாடத் திட்ட வடிவமைப்பு குழுவில் மொத்தம் 17 பேர் உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். இக்குழு 4-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரையிலான பாடப் புத்தகங்களை வடிவமைக்கும்.



புதிய பாடத் திட்டக் குழு விவரம்
- டாக்டர் மயில்சாமி அண்ணாதுரை – தலைவர்
- டாக்டர் த.வி.வெங்கடேஸ்வரன் – உறுப்பினர் (அறிவியல் பேராசிரியர், ஐ.ஐ.எஸ்.இ.ஆர், மொஹாலி)
- டாக்டர் ரீட்டா ஜான் – உறுப்பினர் (இயற்பியல் பேராசிரியர், சென்னை பல்கலைக்கழகம்)
- டாக்டர் எம்.சுதந்திரமுத்து – உறுப்பினர் (முன்னாள் பேராசிரியர், மாநிலக் கல்லூரி, சென்னை)
- டாக்டர் என்.மதிவாணன் – உறுப்பினர் (தாவரவியல் துறை முன்னாள் தலைவர், சென்னை பல்கலைக்கழகம்)
- டாக்டர் டி.அசோகன் – உறுப்பினர் (வரலாற்று பேராசிரியர், பாரதிதாசன் பல்கலைக்கழகம், திருச்சி)
- டாக்டர் எஸ்.ஏஞ்சல் ரத்னாபாய் – உறுப்பினர் (ஐடி நிபுணர், மத்திய கல்வி தொழில்நுட்ப நிறுவனம், புதுடெல்லி)
- திருமதி உமா ராமன் – உறுப்பினர் (ஆங்கில மொழி கற்பித்தல் நிபுணர், சென்னை)
- டாக்டர் பி.மகாவீர் – உறுப்பினர் (முதல்வர், ஏ.எம்.ஜெயின் கல்லூரி, மீனம்பாக்கம்)
- திரு. மணியம் செல்வன் – உறுப்பினர் (ஓவியர், சென்னை)
- டாக்டர் கே.ராஜன் – உறுப்பினர் (முன்னாள் வரலாற்று பேராசிரியர், புதுச்சேரி பல்கலைக்கழகம்)
- திரு. ஆர்.சந்தன தேவன் – உறுப்பினர் (கல்வியாளர், மகரிஷி வித்யா மந்திர், திருநீர்மலை)
- டாக்டர் எம்.செல்வம் – உறுப்பினர் (முதல்வர், ஆசிரியர் பயிற்சி பள்ளி, நாமக்கல்)
- திரு. ஸ்ரீ திலீப் – உறுப்பினர் (பட்டதாரி ஆசிரியர், அரசு மேல்நிலைப்பள்ளி, சத்தியமங்கலம், விழுப்புரம்)
- திரு. கே.எஸ்.டி. ஆனந்த் அஜித் மகியா – உறுப்பினர் (கல்வி உரிமை ஆர்வலர்)
- இயக்குநர், மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் (SCERT), சென்னை – உறுப்பினர்-செயலர்
- பதவிவழி உறுப்பினர்கள் (Ex-Officio Members):
- உயர்மட்ட பாடத்திட்ட நிபுணர் குழுவின் துணைத் தலைவர்
- பள்ளிக் கல்வி இயக்குநர்
- தொடக்கக் கல்வி இயக்குநர்
- தனியார் பள்ளிகள் இயக்குநர்
- அரசுத் தேர்வுகள் இயக்குநர்
