மக்களே மிஸ்பண்ணிடாதீங்க.. கிடுகிடுவென சரிந்த தங்கம், வெள்ளி விலை நிலவரம்!

Published On:

| By Pandeeswari Gurusamy

gold

தமிழகத்தில் இன்று (ஜூன் 30) ஒரு சவரன் ஆபரணத்தங்கம் ரூ.2,160 வரை குறைந்து விற்பனை செய்யப்படுகிறது.

சர்வதேச சந்தை நிலவரம், டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு, போர் பதற்றங்கள் மற்றும் உலகளாவிய தேவை உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் தங்கம் மற்றும் வெள்ளியின் விலை நாள்தோறும் ஏற்ற இறக்கங்களைச் சந்தித்து வருகிறது. அந்த வகையில்,இன்று ஒரு கிலோ வெள்ளி ரூ. 5,000 வரை குறைந்துள்ளது.

ADVERTISEMENT

இன்றைய தங்கத்தின் விலை நிலவரம்

சென்னையில் இன்று 22 கேரட் ஆபரணத்தங்கம் ஒரு கிராம் ரூ.270 குறைந்து ரூ.13,030-க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதன் மூலம் ஒரு சவரன் ஆபரணத்தங்கம் ரூ.2,160 குறைந்து ரூ.1,04,240-க்கு விற்பனையாகிறது.

அதேபோல், 18 கேரட் தங்கம் ஒரு கிராம் ரூ.225 குறைந்து ரூ.10,900-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு சவரன் ரூ.1,800 குறைந்து ரூ.87,200 க்கு விற்பனை செய்யப்படுகிறது.

ADVERTISEMENT

இன்றைய வெள்ளி விலை நிலவரம்

சென்னையில் இன்று வெள்ளி விலை ஒரு கிராம் ரூ. 5 குறைந்து ரூ.240 க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிலோ வெள்ளி ரூ. 5000 வரை குறைந்து ரூ.2,40,000க்கு விற்பனை செய்யப்படுகிறது.

கடந்த 10 நாட்களில் தங்கம் விலை நிலவரம் (ஒரு சவரன்)
29-6-20261,06,400
28-6-20261,06,960
27-6-20261,06,960
26-6-20261,06,400
25-6-20261,05,120
24-6-20261,06,800
23-6-20261,08,480
22-6-20261,08,800
21-6-20261,08,800
20-6-20261,08,800

கடந்த 10 நாட்களில் வெள்ளி விலை நிலவரம் (ஒரு கிராம்)

29-6-2026245
28-6-2026245
27-6-2026245
26-6-2026245
25-6-2026230
24-6-2026240
23-6-2026250
22-6-2026255
21-6-2026255
20-6-2026255
Photo of author
Pandeeswari Gurusamy

ஊடகத்துறையில் கடந்த 2010-ஆம் ஆண்டு முதல் பணியாற்றி வரும் பாண்டீஸ்வரி குருசாமி, 'தீக்கதிர்' நாளிதழ் & இணையதளம் மற்றும் 'இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ்' ஆகிய நிறுவனங்களில் பணியாற்றியவர். அரசியல் மற்றும் சமூகம் சார்ந்த செய்திகளைத் தொடர்ந்து எழுதி வரும் இவர், தற்போது 'மின்னம்பலம்' இணைய இதழில் பணியாற்றி வருகிறார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share