ரூ.102 கோடிக்கு விற்பனையான மைக்கேல் ஜோர்டானின் ‘Last Dance’ ஜெர்சி!

Published On:

| By Minnambalam Desk

கூடைப்பந்து உலகின் மிகப்பெரிய நட்சத்திரங்களில் ஒருவரான மைக்கேல் ஜோர்டானின் 1998 NBA Finals போட்டியில் அணிந்த ஜெர்சி, ஏலத்தில் புதிய சாதனை படைத்துள்ளது.

‘The Last Dance’ என அழைக்கப்படும் அந்த வரலாற்றுச் சிறப்புமிக்க சீசனில், Game 3-ல் ஜோர்டான் அணிந்த ஜெர்சி 12.26 மில்லியன் அமெரிக்க டாலருக்கு, இந்திய மதிப்பில் சுமார் ரூ.102 கோடிக்கு விற்பனையாகியுள்ளது. 

ADVERTISEMENT

முந்தைய சாதனையை முறியடித்த ஜெர்சி

இந்த ஏலத்தின் மூலம் மைக்கேல் ஜோர்டான் தொடர்பான விளையாட்டு நினைவுப் பொருட்களின் விற்பனையில் புதிய சாதனை உருவாகியுள்ளது. இதற்கு முன்பு 1998 NBA Finals-ன் Game 1-ல் ஜோர்டான் அணிந்திருந்த ஜெர்சி 10.091 மில்லியன் டாலருக்கு விற்பனையானதே சாதனையாக இருந்தது. புதிய விற்பனை அந்த சாதனையை பின்னுக்குத் தள்ளியுள்ளது. 

ADVERTISEMENT

‘The Last Dance’ சீசனின் முக்கிய நினைவு

1997–98 சீசன் சிகாகோ புல்ஸ் அணிக்காக ஜோர்டானின் கடைசி சீசனாக அமைந்தது. அந்த காலகட்டத்தில் புல்ஸ் அணி தொடர்ந்து இரண்டாவது முறையாக மூன்று சாம்பியன்ஷிப்களை வென்றிருந்தது. 1998 NBA Finals-ல் Utah Jazz அணியை 4–2 என்ற கணக்கில் வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது. Game 6-ல் ஜோர்டான் அடித்த புகழ்பெற்ற வெற்றிப்புள்ளி அந்த தொடரின் உச்சகட்டமாக அமைந்தது. 

ADVERTISEMENT

ரூ.100 கோடியை கடந்த ஏலம்

இந்த ஜெர்சியை தொழிலதிபர் ரியான் கோஃப் சார்பில் Pharrell Williams உருவாக்கிய Joopiter டிஜிட்டல் ஏல நிறுவனம் விற்பனை செய்தது. ஏலத்திற்கு முன்பு ஜெர்சியின் மதிப்பு 10 முதல் 15 மில்லியன் டாலர் வரை இருக்கும் என மதிப்பிடப்பட்டிருந்தது. இறுதியில் 12.26 மில்லியன் டாலருக்கு விற்பனையானது. 

இருப்பினும், விளையாட்டு நினைவுப் பொருட்களின் ஒட்டுமொத்த சாதனையில் இந்த விலை முதலிடத்தில் இல்லை. 1932 World Series போட்டியில் பேப் ரூத் அணிந்த ஜெர்சி 2024-ல் 24.12 மில்லியன் டாலருக்கு விற்பனையானது. 


Photo of author
Minnambalam Desk
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share