வணிக சிலிண்டர் விலை உயர்வு : சென்னையில் எவ்வளவு?

Published On:

| By Kavi

அக்டோபர் 1 முதல் 19 கிலோ எடை கொண்ட வணிக ரீதியிலான எல்பிஜி (LPG) சிலிண்டர்களின் விலை உயர்த்தப்பட்டுள்ளது. இந்த விலை உயர்வு ஒவ்வொரு நகரத்திலும் மாறுபடுகிறது.

பண்டிகைக் காலம் தொடங்கவுள்ள நிலையில் இந்தியாவின் பல்வேறு நகரங்களிலும் வணிக சிலிண்டர்கள் விலை உயர்ந்துள்ளது. 

ADVERTISEMENT

டெல்லியில், 19 கிலோ வணிக ரீதியிலான எல்பிஜி சிலிண்டரின் விலை ரூ. 62.50 அதிகரித்து ரூ. 2,810-ஆக உயர்ந்துள்ளது. இந்தியன் ஆயில் நிறுவனத்தின் தரவுகளின்படி, செப்டம்பர் மாதத்தில் இதன் விலை ரூ. 2,747.50-ஆக இருந்தது.

மும்பையில் ரூ.63 அதிகரித்து ஒரு சிலிண்டர், ரூ. 2,701-லிருந்து ரூ. 2,764-ஆக உயர்ந்துள்ளது.

ADVERTISEMENT

சென்னையில், ரூ.66.50 அதிகரித்து ஒரு சிலிண்டர் விலை ரூ. 2,916.50-லிருந்து ரூ. 2,983-ஆக அதிகரித்துள்ளது.  இன்றைய விலை படி, கன்னியாகுமரியில் ரூ. 3,046-ஆக வணிக சிலிண்டர் விலை உள்ளது.

பாட்னாவில், 19 கிலோ எடை கொண்ட வணிகப் பயன்பாட்டு எரிவாயு சிலிண்டர் விலை ரூ. 3,029-லிருந்து ரூ. 3,100.50-ஆக உயர்ந்துள்ளது. 

ADVERTISEMENT

வீட்டு உபயோக எல்பிஜி விலையில் மாற்றம் இல்லை.

வீட்டு உபயோக சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை டெல்லியில் ரூ. 942-ஆகவும், மும்பையில் ரூ. 941.50-ஆகவும், சென்னையில் ரூ. 957.50-ஆகவும் தொடர்கிறது. லக்னோவில் இதன் விலை ரூ. 979.50-ஆகவும், பாட்னாவில் ரூ. 1,031.50-ஆகவும் உள்ளது.

எல்பிஜி விலையானது சர்வதேச அளவுகோல்கள் மற்றும் நாணய மாற்று விகித மாற்றங்களால் தீர்மானிக்கப்படுகிறது.

பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சகத்தின் கீழ் இயங்கும் ‘பெட்ரோலியம் திட்டமிடல் மற்றும் பகுப்பாய்வு பிரிவு’  இந்தியாவில் பெட்ரோலியம் மற்றும் எல்பிஜி விலைகள் குறித்த தரவுகளைப் பராமரித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. 

Photo of author
Kavi

சமூகம், அரசியல், நீதி நிர்வாகம் சார்ந்த பிரச்சினைகள் குறித்து 2016ஆம் ஆண்டிலிருந்து எழுதி வருகிறார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share