சர்வதேச சந்தையில் வெளியாகும் கச்சா எண்ணெய் futures விலையைவிட, நேரடியாக வாங்கப்படும் physical crude-ன் விலை கணிசமாக உயர்ந்துள்ளதால் இந்திய எண்ணெய் சுத்திகரிப்பு நிறுவனங்களுக்கு செலவு அழுத்தம் அதிகரித்துள்ளது. வளைகுடா நாடுகளில் இருந்து கச்சா எண்ணெய் விநியோகம் பாதிக்கப்பட்டுள்ளதே இதற்கு முக்கிய காரணமாக கூறப்படுகிறது.
Futures விலையை விட அதிகமான Brent Spot விலை
செப்டம்பர் 1 முதல் 22-ம் தேதி வரையிலான காலகட்டத்தில் Brent spot விலை, நவம்பர் futures விலையைவிட சராசரியாக ஒரு பேரலுக்கு 12 டாலர் அதிகமாக இருந்துள்ளது.
செப்டம்பர் 15-ம் தேதி இந்த விலை வித்தியாசம் 22 டாலர் வரை சென்றதாக அமெரிக்க எரிசக்தி தகவல் நிர்வாகத்தின் தரவுகள் தெரிவிக்கின்றன. சில நாட்களில் இந்த இடைவெளி 15 டாலருக்கும் அதிகமாக இருந்துள்ளது.
சுத்திகரிப்பு நிறுவனங்களின் உண்மையான செலவு எதில் நிர்ணயிக்கப்படுகிறது?
சந்தையில் பரவலாக பேசப்படும் futures விலை மட்டுமே சுத்திகரிப்பு நிறுவனங்கள் செலுத்தும் இறுதி தொகையை தீர்மானிப்பதில்லை. வாங்கப்படும் கச்சா எண்ணெயின் physical-market benchmark, அதன் தரத்துக்கான விலை வேறுபாடு மற்றும் ஒப்பந்த நிபந்தனைகள் ஆகியவையும் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படுகின்றன.
இதனால் futures சந்தையில் விலை குறைவாக காணப்பட்டாலும், உண்மையில் வாங்கப்படும் கச்சா எண்ணெயின் விலை உயர்ந்திருக்கலாம்.
வளைகுடா விநியோக பாதிப்பால் அழுத்தம்
வளைகுடா பகுதியில் கச்சா எண்ணெய் விநியோகம் கட்டுப்படுத்தப்பட்டிருப்பதால் physical market-ல் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக தொழில்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
பொதுவாக கச்சா எண்ணெய் கொள்முதல் ஒப்பந்தங்கள் விநியோகத்திற்கு சில மாதங்களுக்கு முன்பே மேற்கொள்ளப்படுகின்றன. எனவே, அப்போது காணப்படும் futures விலை, பின்னர் சுத்திகரிப்பு நிறுவனங்கள் செலுத்த வேண்டிய உண்மையான எண்ணெய் கொள்முதல் செலவை முழுமையாக பிரதிபலிக்காமல் இருக்கலாம்.
