இன்று முதல் மாறும் FD விதிகள்: ரூ.3 கோடி முதலீட்டாளர்கள் கவனிக்க வேண்டியது என்ன?

Published On:

| By Minnambalam Desk

ரூ.3 கோடி மற்றும் அதற்கு மேல் தொகையை வங்கிகளில் Fixed Deposit (FD) ஆக முதலீடு செய்பவர்களுக்கு அக்டோபர் 1 முதல் புதிய விதிமுறைகள் அமலுக்கு வருகின்றன. ரிசர்வ் வங்கி (RBI) கொண்டு வந்துள்ள இந்த மாற்றங்களால், பெரிய தொகைக்கான டெபாசிட் வட்டி விகிதங்களை வங்கிகள் வெளிப்படையாக வெளியிட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. 

தினமும் வட்டி விகிதத்தை வெளியிட வேண்டும்

ADVERTISEMENT

அக்டோபர் 1 முதல், வங்கிகள் தங்களது இணையதளத்தில் Bulk Deposit-களுக்கான வட்டி விகிதத்தை ஒவ்வொரு வேலை நாளிலும் காலை 10 மணிக்குள் வெளியிட வேண்டும். அதிகபட்சமாக 10 நிமிடங்கள் வரை அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.

அதாவது, பெரிய தொகையை FD-யில் முதலீடு செய்யும் ஒருவர் அந்த நாளுக்கான வட்டி விகிதத்தை வங்கியின் இணையதளத்திலேயே தெரிந்துகொள்ள முடியும். 

ADVERTISEMENT

ஒரே தொகைக்கு ஒரே வட்டி

ஒரே நாளில் ஏற்றுக்கொள்ளப்படும் ஒரே மாதிரியான Bulk Deposit-களுக்கு வங்கியின் வெவ்வேறு கிளைகளில் வெவ்வேறு வட்டி விகிதங்களை வழங்க முடியாது.

ADVERTISEMENT

மேலும், குறிப்பிட்ட டெபாசிட்டின் தன்மை மற்றும் Liquidity Coverage Ratio (LCR) அடிப்படையில் மட்டும் சில வித்தியாசங்களை வங்கிகள் செய்யலாம். 

சாதாரண FD முதலீட்டாளர்களுக்கு மாற்றமில்லை

இந்த புதிய விதிகள் பெரும்பாலும் ரூ.3 கோடி அல்லது அதற்கு மேற்பட்ட Bulk Deposit-களை குறிவைத்துள்ளன. எனவே ரூ.1 லட்சம், ரூ.5 லட்சம் அல்லது ரூ.25 லட்சம் போன்ற தொகைகளை சாதாரண FD-யில் வைத்திருப்பவர்களுக்கு அக்டோபர் 1 முதல் பெரிய மாற்றம் இருக்காது. 

பெரிய தொகை முதலீடு செய்பவர்கள் கவனம்

ரூ.3 கோடி அல்லது அதற்கு மேல் FD செய்ய திட்டமிடுபவர்கள், பணத்தை முதலீடு செய்வதற்கு முன் அன்றைய வட்டி விகிதத்தை வங்கி இணையதளத்தில் சரிபார்ப்பது முக்கியம். வெளியிடப்பட்ட வட்டி விகிதத்தின் நகல் அல்லது ஸ்கிரீன்ஷாட்டை வைத்திருப்பதும் பயனுள்ளதாக இருக்கும்.

Photo of author
Minnambalam Desk
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share