மும்பை, சென்னை அணிகள் மோதிய நடப்பு ஐபிஎல் சீசன் தொடரின் இரண்டாவது போட்டி, சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இன்று (மார்ச் 23) நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்ற சென்னை அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. MI target runs to Csk
மும்பை இந்தியன்ஸ் தரப்பில் ரோகித் சர்மா, ரிக்கெள்தான் ஆகியோர் தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கினர். ரோகித் சர்மா ரன் எதுவும் எடுக்காமல் முதல் ஓவரிலேயே டக் அவுட்டாகி நடையை கட்டினார். அடுத்தாக களமிறங்கிய வில் ஜாக்சும் 11 ரன்களில் வெளியேறினார். இதனால் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து மும்பை அணி தடுமாறியது.

மும்பை அணியின் கேப்டன் சூர்யகுமார் யாதவ், திலக் வர்மா அணிக்கு நம்பிக்கை அளிக்கும் விதமாக ஆடினர். தொடர்ந்து சூர்யகுமார் 29 ரன்களுடனும், திலக் வர்மா 31 ரன்களுடனும் ஆட்டமிழந்தனர். அடுத்தாக களமிறங்கிய ராபின் மின்ஸ், சான்ட்னர் ஆகியோரும் சொற்ப ரன்களில் அவுட்டாகி வெளியேறினர். இதனால் 20 ஓவர் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு மும்பை இந்தியன்ஸ் 155 ரன்கள் எடுத்துள்ளது.
சென்னை அணி தரப்பில், கலீல் அகமது 3 விக்கெட்டுகளையும் நூர் அகமது 4 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர். தற்போது இரண்டாவது இன்னிங்ஸில் சென்னை அணி ஆடி வருகிறது. MI target runs to Csk