இன்று இணையதளங்களில் வைரலான மீம்ஸ் மற்றும் ட்ரோல்களை பார்த்து ரிலாக்ஸ் ஆகலாம் வாங்க.

ச ப் பா ணி
தவெக கூட்டத்தில் கலந்து கொள்ளவில்லையே தவிர அரசுக்கான ஆதரவு தொடர்கிறது”- கம்யூனிஸ்ட் தலைவர்கள்
ஈயம் பூசுன மாதிரியும் இருக்கனும், பூசாத மாதிரியும் இருக்கனும்

கோழியின் கிறுக்கல்!!
எண்ணையில் போட்ட சப்பாத்தி போன்ற பூரியும்,
கல்லில் ஊற்றிய இட்லி போன்ற தோசையும் கிடைத்தாலும்,
கல்லூரி விடுதி உணவில் மறுக்க முடியாத சுகம் இருக்கத்தான் செய்தது

பரமசிவம் ராமசாமி
MLA யாராவது மண்டயப்போட்டாதான்..
அந்தத் தொகுதிக்கு இடைத்தேர்தல்னு ஒண்ணு வரும்…
இப்ப என்னடானா!!??
நாங்க ஜெயிப்போம்..
ரிசைன் பண்ணுவோம்!!!
அது உரிமை!!னு
செத்து செத்து விளையாடுறாங்க!!!

கோவிந்தராஜ்
சேர்த்து வைக்கிறதுக்கு காசு இல்லைன்னா கூட பரவாயில்ல..
எனக்கு செலவுக்கே காசு இல்லையே..
❼
பொண்டாண்டி புள்ளய கட்டிபுடிச்சி
தூங்க வேண்டிய வயசுல
கடனையும் கஷ்டத்தையும்
கட்டிபுடிச்சி வாழுறாங்க…

அண்ணாச்சி
இன்னமும் விலை குறையும்…நம்மளும் வாங்கி போடணும்…!!
தங்கமா.. மாமா..? – எம்எல்ஏ…!!!
Caroline
அவனை போன்ற ஒரு கவிதையை இன்று வரை என்னால் எழுத முடியவில்லை
அன்பே பிரியாணி

குற்றலாக் குறிஞ்சி
கடமையை செய், பலனை எதிர்பார்க்காதே… சரி!
கட்டையில் போகும் வரையா?
ArulrajArun
இனி வாட்சப்பில் மெசேஜ் அனுப்ப போன் நம்பர் தேவையில்லை…
-அட ஏங்க நீங்க வேற நம்மாளுங்க வாட்சப்பில் அனுப்பும் மெசேஜ் எல்லாம் பார்க்கும்போது வாட்சப்பே தேவை இல்லைன்னு தோணுது போவீங்களா …

குற்றலாக் குறிஞ்சி
கடவுளின்
அர்த்தமற்ற செயல்…
நல்லவர்களைச் சேதப்படுத்துவதும்,
தீயவர்களைச் சாதிக்க வைப்பதும்…

தனிமையின் காதலி பூஜா
அப்பாவும் அம்மாவும் நல்ல இடமா பாத்து கட்டி வைக்கணும்னு பேசிட்டு இருந்தாங்க
சந்தோசத்துல என்னம்மானு கேட்டேன்…??
மழை வர்ற மாதிரி இருக்கு ஆடு மாட்டேல்லாம் நனையாம இருக்க நல்ல இடமா பாத்து கட்டி வைக்கனும்ன்னு சொல்றாங்க….
Writer SJB
இரவு 11 மணிக்கு மேல்
மீ டு மை செல்ஃப்
எப்ப தூக்கம் வரும்..?
பொறப்பா வரும்..!

லாக் ஆஃப்
