கவர்மெண்ட்டே வேணும்னா நடிக்கணும்: அப்டேட் குமாரு

Published On:

| By Kavi

இன்று இணையதளங்களில் வைரலான மீம்ஸ் மற்றும் ட்ரோல்களை பார்த்து ரிலாக்ஸ் ஆகலாம் வாங்க.

balebalu

ADVERTISEMENT

முதலில் கொரோனா , பின்னர் போர், இப்போ எரிசக்தி தட்டுப்பாடு இவற்றால் கடந்த 10 ஆண்டு சாதனை வீணாகும் அபாயம் – பிரதமர்
காரணம் எல்லாம் அப்புறம் இருக்கட்டும் முதல்ல 10 ஆண்டு சாதனை என்ன ன்னு கொஞ்சம் விளக்குங்க ஐயா

படிக்காதவன்

ADVERTISEMENT

ஓசியில கிடைக்கிறதுக்கூட
ஈசியா கிடைக்க மாட்டேங்குதுனா
நம்ம டிசைன் அப்படின்னு அர்த்தம்…

Writer SJB

ADVERTISEMENT

கவர்மெண்ட் வேலை வேணும்னா படிக்கணும், கவர்மெண்ட்டே வேணும்னா நடிக்கணும்..!

Sasikumar J

தலைக்கு ரெண்டு ஒரு ரூபாய் ஷாம்பு போடுற அளவுக்கு முடி இருந்துச்சு, கல்யாணம் ஆச்சு, ஒரு ரூபா ஷாம்புயே ரெண்டு தடவை போடுற அளவுக்கு வந்துடுச்சு…!!

ச ப் பா ணி

நல்லவனா இரு..
நல்லவன் மாதிரி இருக்காதே

Writer SJB

பொதுவா மனைவி கோபமா இருக்கும்போது கண்ட்ரோல் பண்ண ட்ரை பண்ணாதீங்க
அது ரொம்ப கஷ்டம்..

ஆனா கன்ஃபியூஸ் பண்றது ரொம்ப ஈஸி
அத செஞ்சுட்டு எஸ்கேப் ஆயிடுங்க..!!!

அருண் மனோகரன்

வரலாற்றில் முதல் முறையாக ஓர் முதல்வர் இரண்டு கைகளால் கும்பிட்ட நிகழ்வு நடந்து உள்ளது…
அதுவும் அவரே அவர் கைகளை சேர்த்து வைத்து கும்பிட்டது குறிப்பிடத்தக்கது

லாக் ஆஃப்

Photo of author
Kavi

சமூகம், அரசியல், நீதி நிர்வாகம் சார்ந்த பிரச்சினைகள் குறித்து 2016ஆம் ஆண்டிலிருந்து எழுதி வருகிறார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share