காவிரியின் குறுக்கே மேகதாது அணை (Mekedatu Dam) கட்ட முயற்சிக்கும் கர்நாடகா காங்கிரஸ் அரசை தமிழக காங்கிரஸ் தடுத்து நிறுத்தும் என திமுக துணைப் பொதுச்செயலாளர் கனிமொழி (Kanimozhi) எம்.பி. நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக தமது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள கனிமொழி எம்.பி, “காவிரியின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்டப்படும் என கர்நாடக அரசு அறிவித்திருப்பது கடும் கண்டனத்திற்குரியது. மேற்கு மண்டலத்தில் தொடங்கி தஞ்சை டெல்டா வரை தமிழ்நாட்டில் பாதியை பாலைவனமாக்கத் துடிக்கும் கர்நாடக காங்கிரஸ் அரசின் திட்டத்தை, திமுக ஆட்சியிலிருந்த வரை தடுத்து நிறுத்தியது.
தற்போது, தவெகவின் அமைச்சரவையில் காங்கிரஸ் அமைச்சர்கள் பங்குகொண்டிருக்கும் நிலையில், காவிரிப் பிரச்சனையில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலையிட்டு உடனடியாக அத்திட்டத்தைத் தடுத்து நிறுத்தும் என நம்புகிறேன்.
