மேகதாது அணை விவகாரம் : டி.ஆர்.பாலு, திருச்சி சிவா ஒத்திவைப்பு நோட்டீஸ்!

Published On:

| By Kavi

நாடாளுமன்றத்தில் மேகதாது அணை குறித்து விவாதிக்க, ஒத்திவைப்பு தீர்மானம்  கொண்டுவர திமுக எம்.பி.க்கள் நோட்டீஸ் கொடுத்துள்ளனர். 

நாடாளுமன்றத்தின் மழைக்காலக் கூட்டத்தொடர் ஜூலை 20ஆம் தேதி தொடங்கி ஆகஸ்ட் 13ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. 25 நாட்கள் 19 அமர்வுகளாக நடைபெற உள்ள இந்த கூட்டத்தொடரில் நீட் தேர்வு, சோனம் வாங்சுக் போராட்டம் உள்ளிட்ட பிரச்சினைகள் குறித்து எதிர்க்கட்சிகள் குரல் எழுப்ப திட்டமிட்டுள்ளனர். 

ADVERTISEMENT

தமிழகத்தில் மேகதாது அணை பிரச்சினை தொடர்பாக  குரல் எழுப்ப திமுக எம்.பி.க்கள் திட்டமிட்டுள்ளனர். 

இந்தநிலையில்  மக்களவை, மாநிலங்களவை செயலாளர்களுக்கு, ஒத்திவைப்பு தீர்மானம் கொண்டு வர திமுக நோட்டீஸ்  அனுப்பியுள்ளது.

ADVERTISEMENT

இதுகுறித்து திமுக எக்ஸ் பக்கத்தில்,  ’ஒத்தி வைப்பு தீர்மானம் கொண்டுவர தி.மு.க. மக்களவை குழுத் தலைவர் டி.ஆர்.பாலு, எம்.பி., – மாநிலங்களவை குழுத் தலைவர் திருச்சி சிவா, எம்.பி.,  ஆகியோர் நோட்டீஸ் அளித்துள்ளனர்.

நடைபெற பாராளுமன்ற கூட்டத் தொடரில் மக்களவை மற்றும் மாநிலங்களவை அலுவல் நடத்தை விதிகளின் கீழ் பட்டியலிடப்பட்டுள்ள பிற அலுவல்களையும் தற்காலிகமாக நிறுத்தி வைத்திடவும் – பின்வரும் ஒத்திவைப்பு தீர்மானத்தை கொண்டு வரவும், மக்களவை மற்றும் மாநிலங்களவை செயலகத்திற்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளர்.

ADVERTISEMENT

அதன் விவரம் பின்வருமாறு :-

“காவிரி ஆற்றின் மீது முன்மொழியப்பட்டுள்ள மேகதாது சமநிலைப்படுத்தும் நீர்த்தேக்கம் (Mekedatu Balancing Reservoir) குறித்த கவலைகள், அதனால் பாதிக்கப்படும் மாநிலமான தமிழ்நாட்டின் மீதான அதன் தாக்கம் மற்றும் இது தொடர்பாக ஒரு தீர்ப்பாயத்தை அமைப்பதன் அவசியம் ஆகிய அவசர முக்கியத்துவம் வாய்ந்த விவகாரத்தை விவாதித்து தீர்மானத்தைக் கொண்டு வருதல்”என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Photo of author
Kavi

சமூகம், அரசியல், நீதி நிர்வாகம் சார்ந்த பிரச்சினைகள் குறித்து 2016ஆம் ஆண்டிலிருந்து எழுதி வருகிறார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share