மே மாதம் சம்பளமே தருவதில்லை: தவிக்கும் பகுதிநேர ஆசிரியர்கள்!

Published On:

| By Kavi

TN Part-time Teachers Request

மே மாதம் என்றாலே எங்களுக்கு அரசு ஊதியம் தருவதில்லை என்று பகுதிநேர ஆசிரியர்கள் கூறுகிறார்கள். TN Part-time Teachers Request

அரசு பள்ளிகளில் பகுதிநேர ஆசிரியர்களாக உடற்கல்வி, ஓவியம், கணினி, தையல், இசை உள்ளிட்ட பாடப் பிரிவுகளில் சுமார் 12 ஆயிரம் பேர் பணியாற்றி வருகின்றனர். இவர்கள் கடந்த 14 ஆண்டுகளாக பணி செய்து வருகின்றனர். 

ADVERTISEMENT

இந்தநிலையில், இவர்களுக்கு மே மாதம் மட்டும் சம்பளம் வழங்குவதில்லை என்று கூறுகிறார்கள்.  

தமிழ்நாடு பகுதிநேர ஆசிரியர்கள் கூட்டமைப்பு மாநில ஒருங்கிணைப்பாளர் எஸ்.செந்தில்குமார் நேற்று (ஏப்ரல் 30) வெளியிட்ட அறிக்கையில், ”பகுதி நேர ஆசிரியர்கள் 12 ஆயிரம் பேருக்கு கடந்த 13 ஆண்டுகளாக மே மாதம் மட்டும் சம்பளம் வழங்குவதில்லை.

ADVERTISEMENT

2021 ஆம் ஆண்டு மே மாதம் ஆட்சிக்கு வந்த திமுக தேர்தல் வாக்குறுதி 181படி பகுதிநேர ஆசிரியர்களை பணி நிரந்தரம் செய்து இருந்தால் மே மாதம் சம்பளம் பிரச்சனை ஒழிந்து இருக்கும்.

காலமுறை சம்பளம் கிடைத்து அவ்வப்போது அகவிலைப்படி உயர்வு உள்ளிட்ட அரசு சலுகைகள் கிடைத்து நிம்மதியான வாழ்க்கை கிடைத்து இருக்கும்.

ADVERTISEMENT

இந்த பட்ஜெட்டில் பள்ளிக்கல்வி மானிய கோரிக்கையின்போது பணி நிரந்தரம் குறித்து முதல்வர் நல்ல முடிவை எடுப்பார் என பள்ளிக்கல்வி அமைச்சர் தெரிவித்தார்.

இதனால் 110 விதியில் முதல்வர் பணி நிரந்தரம் அறிவிப்பார் என பகுதிநேர ஆசிரியர்கள் ஆவலோடு எதிர்பார்த்து காத்து இருந்தோம். ஆனால், வழக்கம் போல் இந்த பட்ஜெட்டும் ஏமாற்றத்துடன் முடிந்து விட்டது.

பகுதிநேர ஆசிரியர்களும் இந்த வேலைக்கு சேர்ந்து இதோடு 14வது கல்வியாண்டு முடிந்து விட்டது. TN Part-time Teachers Request

12,500 ரூபாய் சம்பளத்தில் வாழ்வாதாரம் இழந்து தவிக்கின்ற பகுதிநேர ஆசிரியர்களுக்கு இந்த முறையாவது மே மாதம் சம்பளம் வழங்கி கருணை காட்ட வேண்டும்.

12 ஆயிரம் குடும்பங்கள் வாழ்வாதாரம், எதிர்காலம் நலன் கருதி அரசு கொள்கை முடிவு எடுத்து பணி நிரந்தரம் செய்ய வேண்டும். TN Part-time Teachers Request

இதே பாடங்களில் பணிபுரியும் சிறப்பாசிரியர்களை போல், பகுதிநேர ஆசிரியர்களை பணியமர்த்த வேண்டும்” என்று வலியுறுத்தியுள்ளார். 

Photo of author
Kavi

சமூகம், அரசியல், நீதி நிர்வாகம் சார்ந்த பிரச்சினைகள் குறித்து 2016ஆம் ஆண்டிலிருந்து எழுதி வருகிறார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share