கிரிமினல்களுக்கு அமைச்சரவை… எதிர்க்கட்சியினர் தகுதிநீக்கம்! – மம்தா பானர்ஜி

Published On:

| By christopher

பிரதமர் மோடியின் புதிய இந்தியாவில், எதிர்க்கட்சித் தலைவர்கள் பாஜகவின் பிரதான இலக்காக மாறியுள்ளதாக மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி வேதனை தெரிவித்துள்ளார்.

கடந்த 2019ஆம் ஆண்டு நடைபெற்ற பாராளுமன்ற மக்களவை தேர்தல் பிரச்சாரத்தின்போது மோடி பெயர் குறித்து பேசியதற்காக அவதூறு வழக்கு தொடுக்கப்பட்டது.

ADVERTISEMENT

இந்த வழக்கில் சூரத் நீதிமன்றம் நேற்று ராகுல் காந்திக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்ததை தொடர்ந்து எம்.பி.பதவியில் இருந்து அவர் தகுதிநீக்கம் செய்யப்படுவதாக மக்களவை செயலகம் இன்று அறிவித்துள்ளது.

இதனையடுத்து ராகுல்காந்தி இல்லத்திற்கு சோனியா காந்தி தற்போது வந்துள்ள நிலையில் தகுதிநீக்க நடவடிக்கைக்கு எதிராக சட்ட நிபுணர்களுடன் ஆலோசனை நடத்தப்பட்டு வருகிறது.

ADVERTISEMENT

இந்நிலையில் ராகுல்காந்தி மீது எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைக்கு மேற்கு வங்காள முதல்வர் மம்தா பானர்ஜி தனது ட்விட்டர் பக்கத்தில் கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளார்.

அவர், ”பிரதமர் மோடியின் புதிய இந்தியாவில், எதிர்க்கட்சித் தலைவர்கள் பாஜகவின் பிரதான இலக்காக மாறியுள்ளனர்.

ADVERTISEMENT

கிரிமினல் பின்னணி கொண்ட பாஜக தலைவர்கள் அமைச்சரவையில் சேர்க்கப்படுகின்றனர். அதே வேளையில் எதிர்க்கட்சித் தலைவர்கள் பேசியதற்காக தகுதிநீக்கம் செய்யப்படுகின்றனர்.

நமது அரசியலமைப்பு ஜனநாயகத்தில் இன்று ஒரு புதிய வீழ்ச்சியை நாம் கண்டுள்ளோம்” என்று தெரிவித்துள்ளார்.

கிறிஸ்டோபர் ஜெமா

ராகுல் காந்தியின் குரலை நசுக்கும் மத்திய அரசு: மல்லிகார்ஜூன கார்கே

அஜித்தை ’தல’ ஆக்கிய rebel தந்தை: யார் இந்த மணி?

Photo of author
christopher
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share