மதுராந்தகம் தொகுதியில் வாக்காளர்களுக்கு பணம் கொடுத்த தவெக- கையும் களவுமாக பிடித்த அதிமுக நிர்வாகிகள்!

Published On:

| By Mathi

Maduranthakam-TVK

மதுராந்தகம் சட்டசபை தொகுதியில் இன்று இடைத்தேர்தல் வாக்குப்பதிவு நடைபெறும் நிலையில், மோச்சேரி பகுதியில் வாக்காளர்களுக்கு தவெகவினர் பணம் பட்டுவாடா செய்ததாக அதிமுகவினர் குற்றம்சாட்டியுள்ளனர்.

மதுராந்தகம் தொகுதியில் தவெக சார்பில் மரகதம் குமரவேல், திமுக சார்பில் இ.பரந்தாமன், அதிமுக சார்பில் கணிதா சம்பத் உள்ளிட்டோர் போட்டியிடுகின்றனர். இன்று காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்குகிறது.

ADVERTISEMENT

இந்த நிலையில், மோச்சேரி பகுதியில் வாக்காளர்களுக்கு பணம் வழங்கியதாகக் கூறப்படும் தவெகவினரை அதிமுக நிர்வாகிகள் கையும் களவுமாக பிடித்ததாக சமூக வலைதளங்களில் தகவல்கள் பரவி வருகின்றன.

இதையடுத்து சம்பவ இடத்திற்கு தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் வந்ததாகவும், அதிமுக வேட்பாளர் கணிதா சம்பத் உள்ளிட்ட அதிமுக நிர்வாகிகளும் அங்கு சென்றதாகவும் அதிமுக தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

இந்த சம்பவத்தை முன்வைத்து தவெக மீது அதிமுகவினர் சமூக வலைதளங்களில் கடுமையான விமர்சனங்களை முன்வைத்து வருகின்றனர்.

Photo of author
Mathi

30 ஆண்டுகள் ஊடகத் துறை அனுபவம், அச்சு, இணையம், வானொலி, தொலைக்காட்சி ஊடகங்களில் பணியாற்றியவர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share