பெரம்பூர் தொகுதியில் தாக்கல் செய்த வேட்பு மனுவில் சொத்து விபரங்களை முழுமையாக தெரிவிக்கவில்லை என்ற குற்றச்சாட்டில் எந்த அடிப்படையும் இல்லை என்று முதல்வர் விஜய் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முதல்வர் விஜய் பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு ஆகிய தொகுதிகளில் வெற்றி பெற்றார்.
இவரது வெற்றியை எதிர்த்து பெரம்பூர் தொகுதி வாக்காளர்களான தினேஷ், லட்சுமி நரசிம்மன் மற்றும் திமுக வேட்பாளர் ஆர் டி சேகர் ஆகியோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தனர்.
இந்த வழக்குகளை நிராகரிக்க கோரி விஜய் சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த மனுக்கள் மீதான இறுதி விசாரணை நீதிபதி லட்சுமி நாராயணன் முன்பு இன்று (அக்டோபர் 5) தொடங்கியது.
அப்போது முதல்வர் விஜய் சார்பில் உச்ச நீதிமன்ற தீர்ப்புகள், சட்ட ஆணைய பரிந்துரைகள் ஆகியவற்றை சுட்டிக்காட்டி அவரது சார்பில் மூத்த வழக்கறிஞர் கோபால் சங்கரநாராயணன் வாதங்களை முன் வைத்தார்.
“பெரம்பூர் தொகுதியில் தாக்கல் செய்யப்பட்ட வேட்புமனுவில் முழுமையான சொத்து விவரங்கள் வெளியிடப்படவில்லை என்ற குற்றச்சாட்டில் எவ்வித அடிப்படையும் இல்லை” என்று தெரிவித்தார்.
முதல்வர் விஜய் சார்பில் வாதங்கள் முடிவடையாததை அடுத்து தேர்தல் வழக்குகளை நிராகரிக்க கோரிய மனு மீதான விசாரணையை நீதிபதி நாளை அக்டோபர் 6ம் தேதிக்கு ஒத்தி வைத்தார்.
