தாராபுரம், மதுராந்தகம் இடைத்தேர்தல் – கடந்த தேர்தலை விட சரிந்த வாக்குப்பதிவு!

Published On:

| By Pandeeswari Gurusamy

தமிழகத்தில் மதுராந்தகம் மற்றும் தாராபுரம் ஆகிய தொகுதிகளில் இடைத்தேர்தல் வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்குத் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்றது.

இன்று மாலை 6 மணியுடன் வாக்குப்பதிவு நிறைவடைய உள்ளது. தேர்தலில் பதிவான வாக்குகள் வரும் 9ஆம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.

ADVERTISEMENT

இந்தத் தேர்தலில் தவெக, திமுக, அதிமுக, நாம் தமிழர் கட்சி, கம்யூனிஸ்டுகள் என ஐந்து முனைப் போட்டி நிலவுகிறது. தாராபுரத்தில் 22 வேட்பாளர்களும், மதுராந்தகத்தில் 27 வேட்பாளர்களும் களமிறங்கியுள்ளனர்.

இந்நிலையில், மாலை 5 மணி நிலவரப்படி தாராபுரம் மற்றும் மதுராந்தகம் ஆகிய இரண்டு தொகுதிகளிலும் பதிவான வாக்கு விவரங்களை இந்தியத் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

ADVERTISEMENT

அதன்படி 5 மணி அளவில் மதுராந்தகத்தில் 83.86% வாக்குகளும், தாராபுரத்தில் 78.53% வாக்குகளும் பதிவாகியுள்ளன.

தாராபுரத்தில் பதிவாக வாக்குகள் விபரம்

ADVERTISEMENT
நேரம்இடைத்தேர்தலில் பதிவான வாக்குகள்2026 பொதுத் தேர்தலில் பதிவான வாக்குகள்
9 மணி நிலவரம்17.55%18.88 %
11 மணி நிலவரம்37.28%40.89%
1 மணி நிலவரம்56.09%62.06%
3 மணி நிவலரம்68.08%75.61%
5 மணி நிலவரம்78.53%86.76%

மதுராந்தகத்தில் பதிவான வாக்குகள் விபரம்

நேரம்இடைத்தேர்தலில் பதிவான வாக்குகளின் விபரம்2026 பொதுத்தேர்தலில் பதிவான வாக்குகளின் விபரம்
9 மணி நிலவரம்15.99%16.55%
11 மணி நிலவரம்35.55%37.28%
1 மணி நிலவரம்55.19%57.22%
3 மணி நிவலரம்70.31%72.41%
5 மணி நிலவரம்83.8687.84%

இந்த இரண்டு தொகுதிகளிலும் அதிமுக சார்பில் வெற்றி பெற்ற மரகதம் குமரவேல் மற்றும் சத்யபாமா ஆகிய இருவரும் தங்கள் பதவியை ராஜினாமா செய்ததால் இடைத்தேர்தல் நடந்தது.

தற்போது இவர்கள் இருவரும் மீண்டும் தவெகவில் இணைந்து தேர்தல் களத்தைச் சந்திக்கின்றனர்.

இதனால் பொதுமக்கள் தரப்பில் அதிருப்தி நிலவும் சூழலில், நான்கு மாதங்களுக்குள் இடைத்தேர்தலைச் சந்திப்பது மற்றும் கடும் வெயில் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் வாக்குப்பதிவு சதவீதம் சரிந்திருக்கலாம் என்று சொல்லப்படுகிறது.

Photo of author
Pandeeswari Gurusamy

ஊடகத்துறையில் கடந்த 2010-ஆம் ஆண்டு முதல் பணியாற்றி வரும் பாண்டீஸ்வரி குருசாமி, 'தீக்கதிர்' நாளிதழ் & இணையதளம் மற்றும் 'இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ்' ஆகிய நிறுவனங்களில் பணியாற்றியவர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share