தமிழ்நாட்டில் வரும் ஏப்ரல் 23ஆம் தேதி ஒரே கட்டமாக சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறுகிறது.
தேர்தல் பிரச்சாரங்கள் களைகட்டியிருக்கும் நிலையில் எந்தெந்த தொகுதியை யார் கைப்பற்ற போகிறார்கள் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
இந்தசூழலில் நமது மின்னம்பலம் 234 தொகுதிகளிலும் மக்களை நேரடியாக சந்தித்து மெகா சர்வே நடத்தியது.
மார்ச் 20 முதல் மார்ச் 31ஆம் தேதி வரை தமிழ்நாடு முழுவதும் ஒவ்வொரு தொகுதியிலும் 400 பேர் வீதம் 234 தொகுதிகளில் 93,600 பேரிடம் வயது, சாதி எண்ணிக்கைகளுக்கு ஏற்ப நடத்தப்பட்ட துல்லியமான கருத்து கணிப்பு முடிவுகள் ஏப்ரல் 9 முதல் மின்னம்பலம் இணையதளத்தில் தொடர்ச்சியாக வெளியாகிறது.
இதில் மதுரை மேற்கு சட்டப்பேரவைத் தொகுதியை கைப்பற்றப்போவது யார் என பார்க்கலாம்…
மதுரை மேற்கு வாக்காளர்கள்

வயது வாரியான வாக்காளர்கள் : ஆண்- பெண்



சாதி வாரியான வாக்காளர்கள்

2021 – சட்டமன்ற தேர்தல் வெற்றி

2024 நாடாளுமன்ற தேர்தல் வெற்றி

2026 – மின்னம்பலம் சர்வே முடிவு

மதுரை மேற்கு… இந்த தொகுதியும் கூட பல தலைவர்கள் வென்ற தொகுதிதான்.
இடதுசாரி தலைவர்கள் சங்கரய்யா, கேடிகே தங்கமணி ஜெயிச்சிருக்காங்க.
1980-ல் எம்ஜிஆர் போட்டியிட்டு ஜெயிச்சாரு. பொன் முத்துராமலிங்கம், பிடிஆர் பழனிவேல்ராஜன் ஜெயிச்சிருக்காங்க.
கடந்த 2016, 2021-ன்னு 2 தேர்தல்களில்ல முன்னாள் அமைச்சர் அதிமுகவின் செல்லூர் ராஜூ ஜெயிச்சிருக்காரு. இந்த முறையும் செல்லூர் ராஜூ அதிமுக வேட்பாளராக போட்டியிடுகிறார்..
இங்கே திமுக வேட்பாளராக ரகு பாலாஜி போட்டியிடுகிறார்.
இதுதான் அவருக்கு முதல் தேர்தல். புதுமுகம்.
நமது சர்வே முடிவுபடி,
திமுக கூட்டணி- 36%
அதிமுக கூட்டணி-40%
தவெக-14%
நாதக- 9%வாக்குகள் பெறும்
அதிமுகவின் செல்லூர் ராஜூ கொஞ்சம் லீடிங்கில் இருக்கிறார்.
கருத்து கணிப்பின் முடிவுகள் 3% சதவீதம் அதிகமாகவோ அல்லது குறைவாகவோ இருக்க சாத்தியம் உள்ளது.
அடுத்த தொகுதி சர்வே முடிவு விரைவில்
