தமிழ்நாட்டில் வரும் ஏப்ரல் 23ஆம் தேதி ஒரே கட்டமாக சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறுகிறது.
தேர்தல் பிரச்சாரங்கள் களைகட்டியிருக்கும் நிலையில் எந்தெந்த தொகுதியை யார் கைப்பற்ற போகிறார்கள் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
இந்தசூழலில் நமது மின்னம்பலம் 234 தொகுதிகளிலும் மக்களை நேரடியாக சந்தித்து மெகா சர்வே நடத்தியது.
மார்ச் 20 முதல் மார்ச் 31ஆம் தேதி வரை தமிழ்நாடு முழுவதும் ஒவ்வொரு தொகுதியிலும் 400 பேர் வீதம் 234 தொகுதிகளில் 93,600 பேரிடம் வயது, சாதி எண்ணிக்கைகளுக்கு ஏற்ப நடத்தப்பட்ட துல்லியமான கருத்து கணிப்பு முடிவுகள் ஏப்ரல் 9 முதல் மின்னம்பலம் இணையதளத்தில் தொடர்ச்சியாக வெளியாகிறது.
இதில் சீர்காழி சட்டப்பேரவைத் தொகுதியை கைப்பற்றப்போவது யார் என பார்க்கலாம்…
சீர்காழி வாக்காளர்கள்

வயது வாரியான வாக்காளர்கள் : ஆண்- பெண்



சாதி வாரியான வாக்காளர்கள்

2021 – சட்டமன்ற தேர்தல் வெற்றி

2024 நாடாளுமன்ற தேர்தல் வெற்றி

2026 – மின்னம்பலம் சர்வே முடிவு

சீர்காழி தனித் தொகுதி… திமுக அதிமுக மாறி மாறி ஜெயிச்சுகிட்டு இருக்கிற தொகுதி இது.. திமுகவில சிட்டிங் எம்.எல்.ஏ. பன்னீர்செல்வம் 1989, 1996, 2006, 2021-ன்னு 4 முறை ஜெயிச்சாரு.
இது முதல்வர் ஸ்டாலின் மனைவி துர்கா அம்மையாரின் திருவெண்காடு ஊர் இடம் பெறுகிற தொகுதி.
இந்த தொகுதியில திமுகவின் பன்னீர்செல்வத்துக்கே மறுபடியும் வாய்ப்பு தரனும்னு துர்கா அம்மையாரும் ரொம்பவே முயற்சி செஞ்சாங்க. வாதாடி பார்த்தாங்க.. சூழ்நிலை கருதி இந்த தொகுதி மதிமுகவுக்கு போனது.
இந்த தொகுதியில் முதலில் தீப்பெட்டி சின்னத்தில்தான் நிற்கிறதா இருந்தது. ஆனால் தன்னோட சொந்த தொகுதியில திமுகதான் நிக்கல.. உதயசூரியனிலாவது மதிமுகவை நிக்க சொல்லுங்கன்னு முதல்வர் ஸ்டாலினுடன் சண்டையே போட்டாங்க துர்கா.
அதனால மதிமுக வேட்பாளர் செந்தில்செல்வன் இப்போது உதயசூரியனில இங்கே நிற்கிறாரு. அதோட, சொந்த தொகுதி என்பதால உதயசூரியனுக்காக துர்கா அம்மையாரும் வாக்கு சேகரிக்கிறாங்க.
இங்கே அதிமுக வேட்பாளராக போட்டியிடுகிற சக்தி, 2011-ல் எம்.எல்.ஏ.வாக இருந்தவரு.
நமது சர்வே முடிவுபடி,
திமுக –40 %
அதிமுக –34 %
தவெக- 15%
நாதக- 10% வாக்குகள் பெறும்
உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடும் மதிமுக வேட்பாளர் செந்தில்செல்வன் முன்னிலை வகிக்கிறார்.
கருத்து கணிப்பின் முடிவுகள் 3% சதவீதம் அதிகமாகவோ அல்லது குறைவாகவோ இருக்க சாத்தியம் உள்ளது.
அடுத்த தொகுதி சர்வே முடிவு விரைவில்
