நாளை மதுரை மீனாட்சி அம்மன் கோவில் கும்பாபிஷேகம்: சிறப்பு ரயில்கள்- முழு விவரம்!

Published On:

| By Mathi

Madurai Meenakshi Amman Temple Kumbabhishekam

Meenakshi Amman Temple Kumbabhishekam Spl Trains: வரலாற்று சிறப்புமிக்க மதுரை மீனாட்சி அம்மன் கோவில் கும்பாபிஷேகம் நாளை செப்டம்பர் 17-ந் தேதி வெகுவிமரிசையாக நடைபெற உள்ளது. இதற்காக பிரம்மாண்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.

மதுரை மீனாட்சி அம்மன் கோவில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு பக்தர்களின் வசதிக்காக சிறப்பு ரயில்களை தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

ADVERTISEMENT

திருநெல்வேலி–கூடல் நகர் (ரயில் எண் 06001)

இந்த முன்பதிவு இல்லாத எக்ஸ்பிரஸ் சிறப்பு ரயில், இன்று செப்டம்பர் 16-ந் தேதி பிற்பகல் 1 மணிக்கு திருநெல்வேலியில் இருந்து புறப்பட்டு, மாலை 5.35 மணிக்கு மதுரை ரயில் நிலையத்தை வந்தடையும். அங்கிருந்து மாலை 5.45 மணிக்கு புறப்பட்டு, மாலை 6.30 மணிக்கு கூடல் நகரை சென்றடையும்.

மறுமார்க்கத்தில் ரயில் எண் 06002, செப்டம்பர் 17-ந் தேதி நண்பகல் 12.15 மணிக்கு கூடல் நகரில் இருந்து புறப்பட்டு, 12.30 மணிக்கு மதுரை ரயில் நிலையத்தை வந்தடையும். அங்கிருந்து 12.40 மணிக்கு புறப்பட்டு, மாலை 5.50 மணிக்கு திருநெல்வேலியை சென்றடையும்.

ADVERTISEMENT

இந்த ரயில் சேரன்மகாதேவி, கல்லிடைக்குறிச்சி, அம்பாசமுத்திரம், கீழக்கடையம், பாவூர்சத்திரம், தென்காசி, கடையநல்லூர், பாம்புகோவில் சந்தை, சங்கரன்கோவில், ராஜபாளையம், ஸ்ரீவில்லிபுத்தூர், சிவகாசி, திருத்தங்கல், விருதுநகர், கள்ளிக்குடி, திருமங்கலம், திருப்பரங்குன்றம் மற்றும் மதுரை ரயில் நிலையங்களில் நின்று செல்லும்.

ராமேஸ்வரம்–பழனி (ரயில் எண் 06780)

இந்த முன்பதிவு இல்லாத எக்ஸ்பிரஸ் சிறப்பு ரயில் இன்று (செப்டம்பர் 16) மாலை 4.55 மணிக்கு ராமேஸ்வரத்தில் இருந்து புறப்பட்டு, இரவு 7.45 மணிக்கு மதுரை ரயில் நிலையத்தை சென்றடையும். அங்கிருந்து இரவு 7.50 மணிக்கு புறப்பட்டு, இரவு 10.30 மணிக்கு பழனியை சென்றடையும்.

ADVERTISEMENT

மறுமார்க்கத்தில் ரயில் எண் 06779, நாளை செப்டம்பர் 17-ந் தேதி பிற்பகல் 2.20 மணிக்கு பழனியில் இருந்து புறப்பட்டு, மாலை 4.25 மணிக்கு மதுரையை அடைந்து, இரவு 8.10 மணிக்கு ராமேஸ்வரத்தை சென்றடையும்.

இந்த ரயில் மண்டபம், ராமநாதபுரம், பரமக்குடி, மானாமதுரை, திருப்புவனம், மதுரை, சோழவந்தான், கொடைரோடு, திண்டுக்கல், அக்கரைப்பட்டி, ஒட்டன்சத்திரம் மற்றும் சத்திரப்பட்டி ஆகிய நிலையங்களில் நின்று செல்லும்.

போடிநாயக்கனூர்–கூடல் நகர் (ரயில் எண் 06004)

இந்த முன்பதிவு இல்லாத எக்ஸ்பிரஸ் சிறப்பு ரயில், நாளை (செப்டம்பர் 17) முற்பகல் 11.20 மணிக்கு போடிநாயக்கனூரில் இருந்து புறப்பட்டு, நண்பகல் 12.45 மணிக்கு மதுரையை வந்தடையும். மதுரையில் இருந்து 12.50 மணிக்கு புறப்பட்டு, பிற்பகல் 1.30 மணிக்கு கூடல் நகரை சென்றடையும்.

மறுமார்க்கத்தில் ரயில் எண் 06003, பிற்பகல் 2.30 மணிக்கு கூடல் நகரில் இருந்து புறப்பட்டு, 2.45 மணிக்கு மதுரை ரயில் நிலையம் வந்தடையும். அங்கிருந்து 2.50 மணிக்கு புறப்பட்டு, மாலை 4.30 மணிக்கு போடிநாயக்கனூரை சென்றடையும்.

இந்த ரயில் தேனி, ஆண்டிபட்டி, உசிலம்பட்டி, வடபழஞ்சி மற்றும் மதுரை ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும்.

தாம்பரம்–மதுரை மெமு சிறப்பு ரயில் (ரயில் எண் 06159)

இன்று மாலை 5 மணிக்கு தாம்பரத்தில் இருந்து புறப்பட்டு, நாளை அதிகாலை 2.20 மணிக்கு மதுரையை சென்றடையும்.

மறுமார்க்கத்தில் ரயில் எண் 06160, நாளை செப்டம்பர் 17-ந் தேதி பிற்பகல் 2 மணிக்கு மதுரையில் இருந்து புறப்பட்டு இரவு 9.45 மணிக்கு தாம்பரத்தை சென்றடையும். இது 12 பெட்டிகளைக் கொண்ட முன்பதிவில்லா மெமு சிறப்பு ரயிலாக இயக்கப்படுகிறது.

Photo of author
Mathi

30 ஆண்டுகள் ஊடகத் துறை அனுபவம், அச்சு, இணையம், வானொலி, தொலைக்காட்சி ஊடகங்களில் பணியாற்றியவர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share