VIDEO: ”தமிழ்நாட்டில் பாதுகாப்பு இல்லையா?”.. வேளாங்கண்ணியில் குடும்பங்களுடன் கர்நாடகா சுற்றுலா பயணிகள் அனுபவித்த கொடுமை- வீடியோ வைரல்!

Published On:

| By Mathi

Karnataka Tourists Face Ordeal in Velankanni- Viral Video

நாகப்பட்டினம் மாவட்டம் வேளாங்கண்ணிக்கு வந்த கர்நாடகா சுற்றுலா பயணிகள் தாங்கள் அனுபவித்த கொடுமையை விவரிக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது.

வைரலாகும் வீடியோவில் பெண் சுற்றுலா பயணி ஒருவர் பேசியிருப்பதாவது: நாங்க பெங்களூரில் இருந்து வேளாங்கண்ணிக்கு வந்திருக்கோம். வந்தாச்சு, 3 டேஸ் ஸ்டே பண்ணி, பஸ்ஸுக்கு டிக்கெட் இல்லைன்னு சொல்லி டிராவல்ஸ்ல நாங்க புக் பண்ணோம்.

ADVERTISEMENT

சோ, எங்ககிட்ட 24,000 வாங்கிட்டாங்க, 21 மெம்பர்ஸ்க்கு. 9.30-க்கு பஸ்னு அவங்க சொன்னாங்க. ‘இப்ப வராது; அவங்க ஆர்ச்சில புடிச்சு வச்சிருக்காங்க, ஆர்ச்சுக்கிட்ட போங்க’ன்னு சொல்றாங்க. ஆர்ச்சுக்கிட்ட போக முடியாது; இங்கேயே வரணும்னு சொல்லிட்டு பஸ்ஸை எடுத்துட்டு வந்தாங்க.

பஸ்ஸை எடுத்துட்டு வந்ததும் நாங்க போய் அங்கே பார்த்தா, அட்டெண்டரும் குடிச்சிருக்காங்க. அதுக்கப்புறம் ஓட்டுற டிரைவரும் குடிச்சிருக்காங்க. அதைக் கேட்கப் போனதுக்கு, அவங்க ‘நாங்க குடிக்கலை’ன்னு சொல்லிட்டு இவ்வளவு பிராப்ளம் ஆயிருச்சு. எல்லா வீடியோவும் நான் அட்டாச் பண்றேன். அதைக் கொஞ்சம் ப்ளீஸ் பாருங்க.

ADVERTISEMENT

தயவுசெய்து, நாங்க தமிழ்நாட்டுக்கு வரணும்னா… அவங்க எவ்வளவு வயசானவங்க! நாங்க குழந்தை வச்சிருக்கோம்; 6 மாசக் குழந்தை இருக்கு. நாங்க தமிழ்நாட்டை நம்பித்தானே வர்றோம். எங்களுக்குச் சேஃப்டி இருக்குதா? குழந்தை வச்சிருக்கோம்; 3 மாசக் குழந்தை. ஆள் கொடுக்கலை. எல்லாரும் பரவாயில்லை; குழந்தை வச்சிருக்காங்க.

எங்களை மிருகம் மாதிரி நடத்துறாங்க. நாங்க கஷ்டப்பட்டு இங்க வந்திருக்கோம். ப்ளீஸ், எங்களுக்கு ஹெல்ப் பண்ணுங்க.

ADVERTISEMENT

3 போலீஸ்காரங்க வந்தாங்க. நாங்க கம்ப்ளைன்ட் பண்ணி அரை மணி நேரத்துக்குப் பிறகு போலீஸ்காரங்க வந்தாங்க. அதுல ஒரு போலீஸ்காரர் குடிச்சிருந்தார். ஆன் டியூட்டியில இருக்கிற போலீஸ்காரங்களும் குடிச்சிட்டு இருந்தாங்க.

நாங்க இவ்வளவு சொல்லிட்டு இருக்கோம். லேடீஸுக்கு இவ்வளவு இம்பார்ட்டன்ஸ் கொடுக்க மாட்டேங்குறாங்க; ரோட்டிலேயே விட்டிருக்காங்க. கேட்டா யாரோ ஒருத்தரை அடிக்கப் போனாங்க. அவங்களையும் பிடிச்சுக்கிட்டு, அவங்களுக்கும் பிராப்ளம் கொடுக்குறாங்களே தவிர, எங்க பிராப்ளத்துக்கு அவங்க ஆக்‌ஷன் எடுக்க மாட்டேங்குறாங்க.

தயவுசெய்து இதுக்கு நீங்க ஆக்‌ஷன் எடுங்க. ப்ளீஸ், நாங்க ரோட்டில் உட்கார்ந்திருக்கோம். எங்களுக்கு இடம் இல்லை; வேற ஃபேமிலியோடு உட்கார்ந்திருக்கோம். அவங்களுக்கும் ஹெல்ப் கேட்கிறோம். ப்ளீஸ். இவ்வாறு பாதிக்கப்பட்ட பெங்களூர் சுற்றுலா பயணி அந்த வீடியோவில் பேசி இருக்கிறார்.

இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பகிரப்படுகிறது. இந்த வீடியோ எப்போது எடுக்கப்பட்டது என்கிற விவரம் இதில் இடம்பெறவில்லை.

இது தொடர்பாக வேளாங்கண்ணியில் உள்ள யுனிவர்சல் டிராவல்ஸ் அலுவலகத்தை அதன் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் பதிவிடப்பட்ட எண்ணில் தொடர்பு கொண்டோம். அதில் குறிப்பிடப்பட்ட 2 எண்களும் சேவையில் இல்லை; காரைக்காலில் உள்ள யுனிவர்சல் டிராவல்ஸ் அலுவலகத்தை தொடர்பு கொண்ட போது தொலைபேசி அழைப்புகளை எடுக்கவில்லை.

VIDEO

Photo of author
Mathi

30 ஆண்டுகள் ஊடகத் துறை அனுபவம், அச்சு, இணையம், வானொலி, தொலைக்காட்சி ஊடகங்களில் பணியாற்றியவர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share