மதுரை மீனாட்சி அம்மன் கோவில் குடமுழுக்கு- குடும்ப விழாவா? தவெக அரசுக்கு அதிமுக ‘சாபம்’!

Published On:

| By Mathi

Meenakshi Amman Temple Consecration

”மதுரை மீனாட்சி அம்மன் கோவில் குடமுழுக்கு விழாவை தவெக ஆட்சியார்கள் குடும்ப விழா போல நடத்தி இருக்கின்றனர்; அதனால் அரசன் அன்று கொல்வான்!
தெய்வம் நின்று கொல்லும்!” என்று அதிமுக விமர்சித்துள்ளது.

இது தொடர்பாக அதிமுகவின் ஐடி விங் எக்ஸ் பக்கத்தில் பதிவிடப்பட்டுள்ளதாவது: அருள்மிகு மீனாட்சி அம்மன் திருக்கோயில் கும்பாபிஷேக விழாவில் பொதுமக்கள் காண முடியாமல், தண்ணீர் உட்பட அடிப்படை வசதிகள் கூட இல்லாமல் மிகுந்த சிரமத்திற்கு ஆளானது வேதனைக்குரியது.

ADVERTISEMENT

பொதுமக்களுக்கான கோயில் விழாவை, ஏதோ தங்கள் வீட்டு Private Function போல
இன்றைய ஆட்சியாளர்கள் நடத்தியிருப்பது வெட்கக்கேடானது. அதுவும், மதுரைக்கு பொறுப்பு அமைச்சராக இருக்கக் கூடிய நிர்மல்குமார், ஏதோ வானத்தில் இருந்து குதித்தவர் போல தன் குடும்ப விழாவை போல் ஒரு புகழ்பெற்ற கோயிலின் குடமுழுக்கை நடத்துவதா?

பக்தர்களால் கோபுரத்தைக் கூட காண முடியவில்லை என்றால், இது யாருக்கான திருவிழா? மக்களுக்கானதா? அல்லது, இந்த அமைச்சரின் உற்றார் உறவினர் மற்றும் சுற்றத்துக்காருக்கானதா? VIP முறை இல்லை என்று சொல்லும் அறநிலையத்துறை அமைச்சர், இன்று நடந்துள்ள VIPs Only திருவிழாவை என்னவென்று சொல்வார்?

ADVERTISEMENT

எதிர்பார்த்ததை விட குறைந்த அளவில் பக்தர்கள் வந்தும், மிக அடிப்படையான விஷயங்களை கூட செய்து வைக்க வக்கில்லாத நிலையில் தான் இந்த அரசு இருக்கிறது என்பதை மக்களே தெரிவித்துவிட்டார்கள்.

இப்படி ஒரு அலங்கோலத்தை அரங்கேற்றிவிட்டு, அதனை சாதனையாக பேசுவதற்கு அமைச்சருக்கு கொஞ்சம் கூட வெட்கமாக இல்லையா? நீங்கள் ஆச்சரியக்குறிகளாக இருப்பதற்காக எதற்காக பக்தர்கள் பாதிக்கப்பட வேண்டும்?

ADVERTISEMENT

ஒரு துரும்பைக் கூட இந்த கும்பாபிஷேகப் பணிக்கு கிள்ளி போடாத ஒரு கேடுகெட்ட அரசுக்கு இந்த குடமுழுக்கில் விளம்பரம் தேவையா? ஒன்றை மட்டும் நினைவிற்கொள்ளுங்கள்- நீங்கள் எத்தனை ஆடம்பரம் படோபடம் எல்லாம் செய்துகொண்டாலும், அன்னை மீனாட்சியை உங்களால் மக்களிடம் இருந்து பிரிக்கவே முடியாது.

அரசன் அன்று கொல்வான்! தெய்வம் நின்று கொல்லும்! இவ்வாறு அதிமுக ஐடி விங் எக்ஸ் பக்கத்தில் பதிவிடப்பட்டுள்ளது.

Photo of author
Mathi

மா.ச.மதிவாணன் (Mathivanan Maran- Mathi) 30 ஆண்டுகள் ஊடகத் துறை அனுபவம், அச்சு, இணையம், வானொலி, தொலைக்காட்சி ஊடகங்களில் பணியாற்றியவர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share