HC to deliver Order on MK Stalin Case: தாம் போட்டியிட்ட கொளத்தூர் தொகுதியில் வாக்குப் பதிவு இயந்திரங்களில் முறைகேடு நடந்துள்ளது; இதனால் தவெக வேட்பாளர் வி.எஸ். பாபு வெற்றி பெற்றது செல்லாது என முன்னாள் முதல்வரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் தொடர்ந்த வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் இன்று தீர்ப்பளிக்க உள்ளது.
கொளத்தூர் தொகுதியில் போட்டியிட்ட மு.க.ஸ்டாலின் தோல்வி அடைந்தது அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. இதனையடுத்து சென்னை உயர்நீதிமன்றத்தில், கொளத்தூர் தொகுதியில் தவெகவின் வி.எஸ்.பாபு வெற்றி பெற்றதை எதிர்த்து மு.க.ஸ்டாலின், சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கை சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி தர்மாதிகாரி, நீதிபதி அருள்முருகன் ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்தது. இந்த வழக்கின் விசாரணைகள் முடிவடைந்து தீர்ப்புக்காக ஒத்திவைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் இன்று காலை 10.30 மணிக்கு இந்த வழக்கில் தீர்ப்பு அளிக்கப்பட இருக்கிறது.
